/tamil-ie/media/media_files/uploads/2020/12/444-9.jpg)
chennai to tirupati ticket tirupati ticket booking
chennai to tirupati ticket tirupati ticket booking : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 25-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி முதல் முறையாக 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இலவச சொர்க்கவாசல் தரிசனத் துக்கு திருப்பதி பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வெளியூர் பக்தர்கள் வர வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதுரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஏற்கனவே ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.
உள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 இடங்களில் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
இங்கு திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். வரும் 24-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படாது. உள்ளூர் பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டை காண்பித்து தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
இலவச தரிசன டிக்கெட்களை பெற பக்தர்கள் நேரில் வந்து அலைமோதுவார்கள் என்பதால், இம்முறை திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே தினமும் 10,000 வீதம் பத்து நாட்களுக்கு ஒரு லட்சம் டிக்கெட்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.அரசு பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் 25-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் அவர்களுடன் 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வரும் 25-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அனுமதி கிடையாது.வழக்கமாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
அனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கோவிலின் அனைத்து இடங்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். எனவே பக்தர்கள் பயமின்றி வருகை புரியலாம் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us