Chennai Tamil News: இந்திய முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பொம்மைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கடல்வாழ் உயிரினங்களுக்குச் சேதம் ஏற்படாமல் உப்பு நீரில் கொலு பொம்மைகளை வைப்பது எப்படி என்பதற்கு விஜிபியின் கைவினைஞர்களின் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
நீருக்குள் கொலு பொம்மைகளை வைக்கும்பொழுது விழாமல், அல்லது மிதிக்காமல் உறுதிபடுத்திக்கொள்ளவும் எண்ணினர்.

நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பு தரும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள மீன்வளத்தில் (விஜிபி மரைன் கிங்டம்), நீருக்கடியில் கொலு காட்சியை அமைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, விஜிபி மரைன் கிங்டம் பதிவேற்றிய யூடியூப் வீடியோவில், ஏழு படிகள் கொண்ட கொலுவில் 50 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இது சில நாட்களுக்கு முன்பு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனால் திறந்து வைக்கப்பட்டது.
விஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் விஜிபி ரவிதாஸ் கூறுவதாவது:
"கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளம் (விஜிபி மரைன் கிங்டம்) வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுமையான ஒன்றை செய்ய விரும்பியது.
டிசம்பர் 2020 இல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாங்கள் ஒரு ஸ்கூபா சாண்டாவை அமைத்தோம், இது எங்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாங்கள் ஒரு ஸ்கூபா கணேஷை வைத்திருந்தோம், மேலும் மக்கள் விநாயகருக்கு பிரார்த்தனை கூட செய்தனர்.
இந்த வருஷம் நவராத்திரிக்கு ஏதாவது செய்யவேண்டும் என ஆசைப்பட்டு, தண்ணீருக்கு அடியில் கொலு வைக்க வேண்டும் என்று யோசித்தோம். இதற்கு முன்பு யாரும் இதைச் செய்யாததால் இதை எப்படிச் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் இருந்தது.
எனவே சோதனை மற்றும் பிழை மூலம், இப்போது பொதுமக்களால் பாராட்டப்படும் ஒன்றை எங்களால் அடைய முடிந்தது, ”என்று அவர் கூறினார்.
"ஒவ்வொரு பொம்மையின் மீதும் ஒரு சிறப்பு பூச்சு பூசப்பட்டது, அது தண்ணீரில் இருக்கும் போது பொம்மையின் மேல் பூசப்பட்ட ஓவியம் வெளியே வராமல் காக்கும். எங்கள் கைவினைஞர்கள் பொம்மைகளின் மீது சிறிய துளைகளை உருவாக்கினர், இதனால் அவற்றின் வழியாக தண்ணீர் செல்லும்.
இங்குள்ள அறைகளிலும் இதேபோன்ற அமைப்பை உருவாக்கினோம். பொம்மைகளை தண்ணீருக்குள் வைத்து, இரண்டு நாட்கள் அதைக் கவனித்து, எல்லாம் சரியாகிவிட்டதை உறுதிசெய்த பிறகு, அதை காட்சிக்காக வைத்தோம்,” என்றார் ரவிதாஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil