/tamil-ie/media/media_files/uploads/2019/09/school11120171.jpg)
cheenai rain school students leave issues
Chennai Rain Today: வங்க கடலின் வெஸ்ட் சென்ட்ரல் பகுதியான ஆந்திர கடலோரத்த்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன், காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது.
ஆனால், இந்த மாவட்டங்களில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடை பெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என சென்னை , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். கன மழையின் காரணமாக பல வீடுகள் சேத மடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வானிலை
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் : வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புகைப்படம்- low pressure area near Andhra Pradesh coast
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.