instagram bug : ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குளறுபடியை கண்டறிந்த சென்னை இளைஞரை பாராட்டி 30,000 அமெரிக்க டாலர்களை பரிசளித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
சென்னையை சார்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் தொழில் நுட்ப சார்ந்த துறையில் வேலை செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
புகைப்படங்களை பதிவேற்றும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனானது மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது. இதில் உள்ள முக்கியமான பாதுகாப்பு குறைபாட்டை துல்லியமாக கண்டுடறிந்த முத்தையா அதனை ஆதாரத்துடன் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பினார்.
இன்ஸ்ட்ராகிராம் பயனாளி தனது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் தேவைப்படும் போது ரிக்வரி கோட் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதையே முத்தையா ஃபேஸ்புக்கிடம் முத்தையா விளக்கினார். உடனடியாக இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்ல் முத்தையா கண்டறிந்த குறைபாடு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கின் சைபர் பாதுகாப்பு பிரிவு மூத்த வல்லுனர் பால் டக்ளின் தெரிவித்துள்ளார். இதனை கண்டறிந்த முத்தையாவை ஃபேஸ்புக் நிறுவனம் பாராட்டியுள்ளது. கூடவே அவருக்கு 30,000 அமெரிக்க டாலர்களை பரிசளித்து கவுரவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 20.56 லட்சம் ஆகும்.
முத்தையாவின் இந்த அசத்தல் முயற்சி இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இது முதன்முறை அல்ல:
இதற்கு முன்பு முத்தையா இதே போல் ஃபேஸ்புக்கில் தரவுகள் அழிந்துபோவது மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இருந்த குறைபாடுகளை கண்டறிந்து வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.