சீக்கிய தலைப்பாகைக்கு களங்கம் என குற்றசாட்டு; சர்ச்சை புத்தகம் வாபஸ்

சீக்கிய சமூகம் மற்றும் அவர்களது பாரம்பர்யத்தை மதிக்கும் நோக்கத்துடனும், ஓவியர் பிரியா குரியனுடன் இணைந்து இந்த புத்தகத்தை இரண்டு ஆண்டாக அன்பின் உழைப்புடன் கொண்டு வந்தோம்

சீக்கியர்கள் தலைப்பாகை கட்டுவது தொடர்பான ஒரு புத்தகத்தை சென்னையின் கரடி டேல்ஸ் பதிப்பகம் திரும்பப் பெற்றுள்ளது “சீக்கியர்களை பாதகமாகச் சித்தரிக்கும் இனரீதியான பாகுபாடு பார்க்கும் கதை” என்று சொல்லும் சிர்ஸா , தம்முடைய ட்டிவீட்டில், பதிப்பகத்தாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக கூறி உள்ளார்.

The Art of Tying a Pug என்ற தலைப்பில் வெளியிட்ட குழந்தைகளுக்கான படக்கதை புத்தகத்தை காராடி டேல்ஸ் என்ற சென்னையை சேர்ந்த பதிப்பகம் திரும்பப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் சீக்கிய சமூகத்தினரின் கடுமையான எதிர்வினைகள், வக்கீல் நோட்டீஸ்களை பதிப்பகம் எதிர்கொள்ள நேர்ந்தது. சீக்கியர்களின் நம்பிக்கை சின்னமான தலைப்பாகையை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்றும், சீக்கியர்களை பாதகமாக சித்தரிக்கும் வகையில் இழிவான வகையில் சித்தரித்தது என குற்றஞ்சாட்டி தொலைபேசி வழியாகவும் பதிப்பகத்தினர் மிரட்டப்பட்டனர்.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டியின் தலைவரும், ரஜொவ்ரி கார்டன் எம்.எல்.ஏ-வுமான மன்ஞ்சிந்தர் சிங் சிஸ்ரா தமது ட்டிவிட்டரில், சீக்கியர்கள் தலைப்பாகை கட்டுவதையும், நாய் ஒன்று தலைபாகை கட்டுவதையும் ஒப்பீடு செய்து புத்தகத்தில் சித்தரித்துள்ளனர். “இதில் சீக்கியர்களின் தலைப்பாகை அணியும் சடங்கை அவமானப்படுத்தி கேலிகூத்தாக்குவது தவிர எந்த ஒரு நகைச்சுவையும் அல்லது கலையும்இந்தப் புத்தகத்தில் இல்லை” என்று தமது ட்டிவிட்டரில் கூறி உள்ளார்.

இனப்பாகுபாடு கொண்ட புத்தகம் சீக்கியர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தொணியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லும் சிர்ஸா , தாம் அந்த பதிப்பாளருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ட்டிவீட் செய்திருக்கிறார். குழந்தைகளின் கள்ளம்கபடம் அற்ற மனதில் பாதகாக எண்ணத்தை விதைக்கும் வகையில் செயல்பட்ட பதிப்பக நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

இது தவிர, அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் நாடாஷா சர்மா, ஓவியர் பிரியா குரியன் ஆகியோருக்கு எதிராக சிர்ஸா புகார் அளித்திருக்கிறார். அவர் தமது புகாரில், “சீக்கிய சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமின்றி, 4-6 வயதுடைய குழந்தைகள் படிக்கும் அந்த புத்தகத்தில், தலைப்பாகை துணியை ஒரு நாய் இழுத்துச் செல்வது போல படங்கள் நிரம்பி இருக்கிறது. இது மீண்டும் ஒவ்வொரு சீக்கியரையும் அவமானப்படுத்தும் வகையில் பொறுத்துக்கொள்ள முடியாத வகையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
காராடி டேல்ஸ் பதிப்பகத்தின் இயக்குனர் சோபனா விஸ்வநாத் கூறுகையில், “இதில் சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை” என்று கூறி உள்ளார். “நாங்கள் ஏன் சீக்கியர்களை மோசமாக சித்தரிக்க வேண்டும்.

To read this article in English

தலைப்பாகை எப்படி கட்டப்படுகிறது என்று குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக அது எழுதப்பட்டது. இந்த கதையின் படத்தில் தலைப்பாகையை நாயின் மீது கட்டவில்லை. நாயை நோக்கி அதன் உரிமையாளர் குனிவார். அதை தமக்கு கட்டப்போகிறார் என்று நாய் நினைக்கும். ஆனால், அந்த மனிதன் தமது தலைப்பாகையை கட்டிக்கொண்டு நாயைத் தூக்கிக் கொண்டு நடைபயிற்சிக்கு செல்வான். நாடாஷா சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தமது குடும்பத்தில் தமது தந்தை, தாத்தா ஆகியோருக்கு தலைப்பாகை கட்ட உதவிகள் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். எப்படி தலைப்பாகை கட்டப்படுகிறது என்று குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறில்லை.”

விஸ்வநாத் மேலும் கூறுகையில், “எங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கிடைக்கப்பட்டதும், இரண்டு நாட்கள் கழித்து புத்தக விநியோகஸ்தர்கள், எங்கள் இணையதளம், அமேசான் உள்ளிட்ட அனைத்து விதமான புத்தக விற்பனை முறைகளில் இருந்தும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை திரும்பப் பெற்று விட்டோம். மன்னிப்புக் கடிதமும் வெளியிட்டு விட்டோம்” என்றார்.
பதிப்பாளர், ஒவியர், எழுத்தாளர் ஆகியோரை குறிவைத்து சமூக வலைத்தளங்கள், தொலைபேசி வழியாக மிரட்டல்களும், நான்கு வக்கீல் நோட்டீஸ்களையும் பதிப்பகம் எதிர்கொண்டது என்கிறார் மேலும் அவர்.

“எங்களுடைய பதிப்பகத்தை தீ வைத்துக் கொளுத்தி விடுவதாக பலர் மிரட்டுகின்றனர்,” என்கிறார் விஸ்வநாத். சமூக வலைத்தளங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மிரட்டல்கள் பதிவிடப்படுகின்றன என்றும் சொல்கிறார். நாடாஷா மும்பையிலும், பிரியா பெங்களூரிலும் இருக்கின்றார். இருவரும் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக சொல்கிறார் விஸ்வநாத். அமிர்தசரஸில் உள்ள நாடாஷாவின் குடும்பம் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறது. பயத்தில் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.  “இது போன்ற விவகாரங்களை நாங்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை. அவர்கள் (போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள்) குண்டர்கள் போல பேசுகின்றனர்,” என்கிறார் விஸ்வநாத்.

“24 ஆண்டு பாரம்பர்யத்துடன் கூடிய பெரிதும் மதிக்கக் கூடிய காராடி டேல்ஸ் பதிப்பகம் இதுவரை 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 10லட்சம் புத்தகங்களை விற்றுள்ளது. ஆழ்ந்த மரியாதையுடன் கூடிய உணர்வுடன் இந்திய கலாசாரம் பாரம்பர்யம் ஆகிய மதிப்பீடுகளை பிரதிபலிக்கின்றோம். நாங்கள் பத்து நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்காக The Art of Tying a Pug என்ற புத்தகத்தை வெளியிட்டோம். சீக்கியர்களின் தலைப்பாகை கட்டும் முறையை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. செல்லப்பிராணியுடன் நகைச்சுவையை ஊடாகப் பயன்படுத்தி, சீக்கியர்களின் பாரம்பர்யமான தலைமுடி மற்றும் தாடியின் கவுரவத்தை பெரும் அளவிலான வாசகர்களுக்கு கொண்டு சென்றது முதல் இந்த புத்தகத்துக்கு சீக்கியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து உற்சாகமான பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றோம்.

கடந்த சில நாட்களாக, சில சீக்கியர்களிடம் இருந்து, இந்த நகைச்சுவை புத்தகம் சீக்கியர்களின் முக்கிய சின்னத்தை சிறுமைப்படுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்று கேட்டு கவலையை வெளிப்படுத்தும் வகையிலான கடிதங்கள் எங்களுக்கு வருகின்றன. சீக்கியம் , அது போன்ற அனைத்து விதமான மதங்களும் நமது கவுரவமிக்க இந்திய பாரம்பர்யத்தின் அங்கங்கள். சீக்கியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலான எந்த ஒரு செயலையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை.

வாசகர்கள் தெரிவித்த கவலைகளை மிகவும் அக்கறையுடன் நாங்கள் பரிசீலிக்கின்றோம்.
இந்த புத்தகத்தைத் திரும்பப் பெறுவது என்று பிரச்னைக்கு உரிய தீர்மானத்தை இப்போதுதான் எடுத்தோம். சீக்கியகுடும்பத்தில் வளர்ந்த தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் விருதுபெற்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர் நாடாஷா சர்மா இந்த புத்தகத்தை எழுதி உள்ளார். திறந்த மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்துடனும் , சீக்கிய சமூகம் மற்றும் அவர்களது பாரம்பர்யத்தை மதிக்கும் நோக்கத்துடனும், ஓவியர் பிரியா குரியனுடன் இணைந்து இந்த புத்தகத்தை இரண்டு ஆண்டாக அன்பின் உழைப்புடன் கொண்டு வந்தோம்” என்கிறார் விஸ்வநாத் விளக்கமாக.

தமிழில் : கே.பாலசுப்பிரமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close