ஒரு முறை இந்த செட்டிநாடு வெள்ளை ஆப்பம் செய்து பாருங்க. செம்ம ருசியாக இருக்கும்.
செய்முறை
பச்சரிசி – 1 டம்பளர்
உளுந்து – கால் கப்
அரை டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் சர்க்கரை
எண்ணெய் பொறிக்கும் அளவு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்தை எடுத்துகொள்ளவும். இதை 3 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் உப்பு, சர்க்கரை சேர்த்துகொள்ளவும். எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது ஒரு தவி மாவை ஊற்றி பொறித்து எடுக்கவும். சுவையான எட்டிநாடு வெள்ளை ஆப்பம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“