chettinad kara chutney recipe kara chutney hotel style
chettinad kara chutney recipe kara chutney hotel style : செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே சுவையுடன் இருப்பதோடு காரமாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்று கார சட்னி.
Advertisment
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
Advertisment
Advertisements
வரமிளகாய் - 4-5
பூண்டு - 3
புளி - 1 இன்ச்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!!