செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி, ரங்கூன் புட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
1.5 ஸ்பூன் நெய்
10 முந்திரி
14 திராட்சை
2 ஸ்பூன் நெய்
1 கப் தேங்காய் துருவல்
1 கப் வெல்லம்
3 கப் தண்ணீர்
2 ஸ்பூன் நெய்
1 கப் ரவை
அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சைகளை வறுத்து எடுத்துகொள்ள வேண்டும். மீண்டும் நெய் சேர்த்து தேங்காய் துருவலை சேர்த்து கிளர வேண்டும், இதையும் தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து ரவையை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதில் பாகை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சையை சேர்த்து கிளவும். நெய் சேர்த்து கிளரவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளவும். சிறிது நேரம் மூடு போட்டு வேகவைக்கவும். செம்ம சுவையான ஸ்வீட் ரெடி.