Advertisment

இந்த காய்கறிகள் போதும்; செட்டிநாடு ஸ்டைல் சுவையான, சிம்பிளான அவியல் இப்படி செய்யுங்க

செட்டிநாட்டு அவியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Aviyal recipe in tamil: How To Cook mixed vegetable (avial) in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான செட்டிநாட்டு அவியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கத்திரிக்காய் – 100 கிராம்
உருளைக் கிழங்கு 2
வெங்காயம், தக்காளி – 1 
பட்டை – சிறிய துண்டு
எண்ணெய்,உப்பு- தேவையான அளவு.

அரைக்க 

தேங்காய்த் துருவல்- கால் கப்
பச்சை மிளகாய்- 5
பூண்டு- 3 
சோம்பு- 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலை- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

முதலில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும்.

காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான அவியல் ரெடி. 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment