Chettinad Uppu Kari : வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல், பலருக்கும் கை, கால் ஓடாது. ஒரே மாதிரியான சிக்கன் / மட்டன் கிரேவி, சில்லி, போன்றவைகளை சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த செட்டிநாடு உப்பு கறியை நிச்சயம் முயற்சிக்கலாம். குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய இந்த சமையல், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சுவையில் சுண்டி இழுக்கும்.
முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாக கழுவவும் . கறித்துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்க வேண்டும். வரமிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தொடர்ந்து உப்பு, மஞ்சள், கோழிக்கறி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வரமிளகாய் தக்காளி இரண்டும் தோல் தனித்து வரும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். இந்தக் கறியின் சுவையே இதில் தான் இருக்கிறது.
(கட்டாயம் மிதமான தீயில் வதக்கவும்) பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறி, மென்மையாக வேகும் வரை விடவும்.
பிறகு நீர் வற்றியதும், மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”