/indian-express-tamil/media/media_files/SGRtzD3nSQL0xVafsFmu.jpg)
நவி மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் புரோஸ்டோடான்டிஸ்ட் மற்றும் நிபுணரான டாக்டர் நினாட் முலே, சூயிங்கம் பொதுவானது என்றாலும், பலர் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பாதிப்புகளை கவனிப்பது இல்லை என்று கூறினார்.
சூயிங் கம்- ஆரோக்கிய நன்மைகள்
Oral health: சர்க்கரை இல்லாத இனிப்பு இல்லாத சூயிங்கம் குறிப்பாக சைலிட்டால் உள்ளவை, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது வாயில் இயற்கையான சுரங்கும் பாதுகாப்பு அம்சமான உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. உமிழ்நீர் பாதிப்பு ஏற்படுத்தும் ஆசிட்டிகளை நடுநிலையாக்குகிறது.
பல் பற்சிப்பி மறு கனிமமயமாக்கலுக்கு உதவுகிறது, துவாரங்கள் மற்றும் ஈறு நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இருப்பினும், பல் சிதைவைத் தவிர்க்க சர்க்கரை இல்லாத சூயிங் கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் முலே வலியுறுத்துகிறார்.
மன அழுத்ததைக் குறைக்கும்
சூயிங்கம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, கவனம், நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்களுக்கு, இது மேலும் உதவியாக இருக்கும். விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் சூயிங்கம் சாப்பிடுவது காது அழுத்தத்தை சமன் செய்ய உதவும் என்றார்.
அதிகமாக சாப்பிடக் கூடாது
தாடை தசை சோர்வு மற்றும் வலி: அதிகப்படியாக சூயிங்கம் மெல்லுதல், குறிப்பாக வாயின் ஒரு பக்கத்தில் வைத்து மெல்லுதல், டெம்போரோமாண்டிபுலர் மூட்டு (TMJ), தாடை வலி, தலைவலி, காதுவலி மற்றும் உணவு மெல்லுவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.
பல் அரிப்பு: சர்க்கரை இல்லாத சூயிங்கமில் கூட அமில சுவைகள் இருக்கலாம், அவை நீண்ட நேரம் மெல்லும்போது, பல் அரிப்புக்கு பங்களிக்கலாம். பற்சிப்பியை இழந்தவுடன், அது மீண்டும் உருவாக்க முடியாது.
ஆங்கிலத்தில் படிக்க: Do you chew gum daily? Expert reveals what happens in that case
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உண்கின்றன, அமிலங்களை உற்பத்தி செய்கின்றன, அவை பற்சிப்பியை அழிக்கின்றன, காலப்போக்கில் பல் துவாரங்கள் மற்றும் பிற பல் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன
டாக்டர் முலே கூறுகையில், சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்களுக்கு குறைவாக சர்க்கரை இல்லாத சூயிங்கம் சாப்பிடலாம் என அவர் பரிந்துரைத்தார். உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், பற்களை சுத்தம் செய்வதற்கும் இதுவே போதுமானது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.