Advertisment

இஞ்சி துண்டை மென்று சாப்பிடுவது திடீர் மாரடைப்புக்கு உதவுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆயுர்வேத மருத்துவர் குரு மணீஷ் ஜி, இஞ்சி துண்டை மென்று சாப்பிடுவது திடீர் மாரடைப்புக்கு உதவும் என்று கூறியதைக் கண்டதும், உடனடியாக நிபுணர்களை அணுகினோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heart health

Can chewing ginger help in case of a sudden heart attack?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆஸ்பிரின் தெரியும், ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால் இஞ்சியை மென்று சாப்பிடுவது பற்றி நாம் கேள்விப்பட்டதே இல்லை.

Advertisment

இதனால்தான் ஆயுர்வேத மருத்துவர் குரு மணீஷ் ஜி, இஞ்சி துண்டை மென்று சாப்பிடுவது திடீர் மாரடைப்புக்கு உதவும் என்று கூறியதைக் கண்டதும், உடனடியாக நிபுணர்களை அணுகினோம்.

நோயாளியிடம் இஞ்சித் துண்டை தீவிரமாக மெல்லச் சொல்லுங்கள். இது ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட்டது, என்று RealHit போட்காஸ்டில் மணீஷ் கூறினார்.

மாரடைப்பின் போது என்ன நடக்கிறது?

முக்கிய கரோனரி தமனி முற்றிலும் அடைபடும் போது, தீவிர மாரடைப்பு (STEMI) ஏற்படுகிறது.

பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் (NCBI) படி, தீவிர மாரடைப்பு என்பது கரோனரி தமனி நோயின் மிகவும் தீவிரமான வெளிப்பாடாகும், மேலும் இது அதிக அபாயம் மற்றும் இறப்புடன் தொடர்புடையது.

ஆரம்பகால நோயறிதல் மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு ஆகியவை மாரடைப்பு இஸ்கெமியா (myocardial ischemia) மற்றும் இன்ஃபார்க்ட் அளவை (infarct size) கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகள். இதன் மூலம் தீவிர மாரைடைப்புக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.

இஞ்சியின் நன்மைகள்

ginger

மற்றொரு NCBI ஆராய்ச்சியின் படி, இஞ்சி பல உடல்நல கோளாறுகளுக்கு எதிராக அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் போன்ற ஏராளமான உயிர்ச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

மாரடைப்பு என்பது மருத்துவ அவசரநிலை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மரணத்தை கூட விளைவிக்கும்.

கடுமையான மாரடைப்பு நிகழ்வுகளில் இஞ்சியை மெல்லுவதன் செயல்திறன் பற்றிய ஆராய்ச்சி அடிப்படையிலான சான்றுகள் எதுவும் இல்லை, இருப்பினும், எந்தவொரு மருத்துவ உதவியும் நாடுவதற்கு முன்பு ஆஸ்பிரின் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

முன்கூட்டியே அல்லது மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக்கொள்வது, மாரடைப்பு நிகழ்வுகளில் உயிர்வாழும் விகிதத்தை மேம்படுத்தலாம்”, என்று டாக்டர் சுதிர் குமார் கூறினார். (consultant neurologist, Apollo Hospitals, Hyderabad)

ஆயுர்வேத மருத்துவரின் கூற்றை மறுத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் சுபேந்து மொஹந்தி, இதில் எந்த உண்மையும் இல்லை. ஆஸ்பிரின் 300mg மாத்திரையை மெல்லுவதே நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய உயிர்காக்கும் விஷயம். அவ்வளவுதான். மீதமுள்ள சிகிச்சை மருத்துவமனையில் உள்ளது, என்றார்.

நைட்ரோகிளிசரின் மருந்து உதவும், குறிப்பாக மாரடைப்பு ஏற்படக்கூடிய ஒருவருக்கு மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டிருந்தால்.

நோயாளியை வசதியாகவும் நிதானமாகவும் வைத்திருங்கள். பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்காமல் சுயநினைவின்றி இருந்தால், CPR உடனடியாக தொடங்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸை வரவழைத்து, நோயாளியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவில் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்று டாக்டர் குமார் கூறினார்.

Read In English: Can chewing ginger help in case of a sudden heart attack?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment