ஒரு முறை இப்படி கொண்டைக்கடலை குழம்பு செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை 2 கப்
5 கிராம்பு
2 பட்டை
2 ஏலக்காய்
அரை ஸ்பூன் சோம்பு
அரை ஸ்பூன் கசகசா
4 முந்திரி
பச்சை மிளகாய் 4
1 ஸ்பூன் பூண்டு நறுக்கியது
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
சின்ன வெங்காயம் 5 நறுக்கியது
¼ கப் கொத்தமல்லி இலை நறுக்கியது
¼ கப் பொதினா
½ கப் துருவிய தேங்காய்
1 வெங்காயம் நறுக்கியது
2 தக்களி நறுக்கியது
¼ டீஸ்பூன் மிளகாய் பொடி
¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் கறி மசாலா பொடி
உப்பு
செய்முறை: இந்த குழம்புக்கு முளைகட்டிய கொண்டைக்கடலையை பயன்படுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் கீராம், பட்டை, ஏலக்காய், கசகசா, சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், பொதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதில் தக்காளியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கறி மசாலா பொடியை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். இதில் உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொண்டைக்கடலையை சேர்த்து குக்கருக்கு மாற்றி 4 விசில் விட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“