மோமோஸ் வாங்க எதுக்கு கடைக்கு? வீட்டில் செய்யலாம் அதுவும் சிக்கன் மோமோஸ்!

கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுவையாக சமைக்கலாம்.

By: August 19, 2020, 8:15:34 AM

chicken momos tamil, chicken momos in tamil : மோமோஸ் தமிழர்களின் நாவிலும் எச்சில் ஊற வைத்துவிட்டது. வாரத்தில் ஒரு பிளேட்டாவது சாப்பிடும் பழக்கம், ஆனா இனிமே மோமோஸ் சாப்பிட கடைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுவையாக சமைக்கலாம். எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

chicken momos in tamil : செய்முறை!

வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.சிக்கனை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும். உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக உதிர்த்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.அடுத்து அதில் சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.

மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிடவும். ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டி தடுவில் தட்டையாக செய்துகொள்ளவும்.

செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் நடுவில் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும். இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும்.

அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.15 – 20 நிமிடங்களுக்கு வேக வைத்து பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Chicken momos tamil chicken momos in tamil chicken momos recipe momos making

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X