நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் சண்முகநாதன் என்பவரது மகன் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளனர். மகன் வாங்கி கொடுத்த சிக்கன் ரைஸை ஆசையாக சாப்பிட்ட தந்தை சண்முகநாதன் மற்றும் நதியா என்பவர் சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சண்முகநாதனின் மகன் மற்றும் சிக்கன் ரைஸ் கடைக்காரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“