New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/27/zDcftwqVEwKCYzv1DlZU.jpg)
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் 44-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரியான தெற்கு வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளகத்தில் தொடங்கியது.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் 44-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரியான தெற்கு வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளகத்தில் தொடங்கியது.
கடலூர் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் 44-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரியான தெற்கு வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளகத்தில் தொடங்கியது. இதில், என்.எல்.சி இந்தியா நிறுனத்தின் தலைவர் பிரசன்னகுமார் நாட்டியாஞ்சலி குறித்த நடராஜர் உருவம் பொறித்த முப்பரிமாணசிறப்பு தபால் உறை வெளியிட்டார்.
நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை 5.45-க்கு மங்கல இசையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி முதல் 6.20 மணி வரை ஊட்டி சபிதா மன்னாடியார் பரதமும், 6.25 முதல் 6.45 மணி வரை சக்தி சஞ்சனா சீரளாவின் பரத நிகழ்வும் நடைபெற்றது. இரவு 6.50 மணி 7.10 மணி வரை சென்னை ஓவிஎம் நடன மைய மாணவிகளின் பரதமும் நடைபெற்றது. இரவு 7.10 அளவில் தொடக்க விழா நிகழ்வ்வுகள் நடைபெற்றது.
இதில், என்.எல்.சி இந்தியா நிறுனத்தின் தலைவர் பிரசன்னகுமார் கலந்து கொண்டு பேசுகையில், "நாட்டிய அஞ்சலி விழா, கலை சார்ந்த விழா மட்டுமல்ல, ஒரு தெய்வீக தன்மையோடு நடைபெறும் கலைவிழா. சிதம்பரம் என்பது அண்டத்தின் மையம் என சொல்லுவார்கள். அப்படிப்பட்ட இடத்தில் நாட்டிய கலையானது நாட்டி அஞ்சலி குழுவினர் நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த நாட்டிய அஞ்சலி விழாவையை பார்க்கும் போது இந்திய நாடு மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளிலிருந்து பல்வேறு கலை பண்பாடுகளை சார்ந்தவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு நாட்டியத்தை ஆடி இறைவனுக்கு சமர்ப்பிக்கும் போது, இது பெருமைக்குரிய புனிதமான விழாவாகிறது. நான் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதற்கு பெருமைப்படுகிறேன். என்.எல்.சி நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள 9 நவரத்தின நிறுவனங்களின் ஒன்றாகும். இந்த நிறுவனத்திலிருந்து நான் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக நாட்டியஞ்சலி சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் அஞ்சல் துறை சார்பில் நடராஜர் உருவம் மற்றும் நடன வடிவங்களின் உருவங்கள் முப்பரிமான வடிவில் இடம் பெற்ற சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது. இதனை நெய்வேலி என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் வெளியிட கடலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மணி முதல் 7.40 வரை தொடங்க விழா நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7.40 மணி முதல் 8.05 மணி வரை சென்னை பரதகலாஞ்சலி குழுவினரின் பரதமும், 8.10 மணி முதல் 8.40 மணி வரை யுஎஸ்ஏ சகிதி நடிம்பள்ளி மாணவிகளின் கூச்சுப்பிடியும், 8.45 மணி முதல் 9.10 மணி வரை மும்பை லக்ஷிமி ராஜ் பரதமும்,9.15 மணி முதல் 9.40 மணி வரை யுஎஸ்ஏ கலாதாரா கலை மைய மாணவிகளின் பரதமும், 9.45 மணி முதல் 10.05 மணி வரை கோவை கே.கே சங்கவி, கே.கே. தாரினியின் பரதமும், 10.10 மணி முதல் 10.35 மணி வரை சுபஸ்ரீ சசிதரன் பரதமும், 10.40 மணி முதல் 11 மணி வரை சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் பரதமும், 11.05 மணி முதல் 11.30 மணி வரை சென்னை ஜெய் குஹானி பரதமும், 11.35 மணி முதல் 11.55 மணி வரை ஹைதராபாத் அபிநய தர்பாணா கலை மையத்தினரின் கூச்சுப்புடியும், 12 மணி முதல் 12.20 வரை கோவை சங்க்கரம் கலை மையத்தின் மாணவிகளின் பரதமும், 12.25 மணி முதல் 12.45 மணி வரை பெங்களூரு சுமங்கலா பிரபு, சிந்து ஸ்ரீதர், பிஎச். பார்கவி ஆகியோரின் பரதமும், 12.50 மணி முதல் 1.10 மணி வரை பெங்களூரு எம்எஸ் நாட்டியசேஷத்ரா குழுவினரின் பரதமும், 1.15 மணி முதல் 1.35 மணி வரை துபாய் ரூபா பிரபு கிருஷ்ணன், லட்சுமி விஸ்வநாத், சரிதா மேனன் ஆகியோரின் பரதமும், 1.40 மணி முதல் 2 மணி வரை பட்டுக்கோட்டை ஸ்ரீ சிவக்கதிர் நிருத்யாலயா மாணவிகளின் பரதமும் நடைபெற்றது.
இந்த நாட்டியாஞ்சலி நன்நிகழ்வு வரும் 2ம்-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 450-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டியாஞ்சலி விழா ஏற்படுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் ஆர். முத்துக்குமரன், துணைத்தலைவர்கள் ஆர். நடராஜன், ஆர். ராமதநாதன், செயலாளர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம், பொருளாளர் டாக்டர். எம். கணபதி, உறுப்பினர்கள் ஆர்கே.கணபதி, ஆர். சபாநாயகம், டாக்டர். எஸ். அருள்மொழிச்செல்வன், வி. முத்துக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.