scorecardresearch

உங்கள் குழந்தை நன்றாக தூங்குகிறதா?

தூக்கமின்மை நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.

Children health
Children health

ஹிமானி டால்மியா மற்றும் நேஹா பட்

தூக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உள்ள இணைப்பு

COVID-19 தொற்றுநோயால், தூக்கத்திற்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இடையிலான இணைப்பு வலுப்பெற்றுள்ளது, உங்கள் உடலை சிறந்த நிலையில் வைத்திருக்க போதுமான தூக்கத்தை கடைபிடிக்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்திக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? தூக்கமின்மை நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன. ஏனென்றால், நாம் தூங்கும்போது நமது உடல், நாள் முழுவதும் நிகழ்ந்த தகவல்களை மீட்டெடுப்பதில், சரிசெய்வதில் மற்றும் செயலாக்குவதில் மும்முரமாக இருக்கும். அடுத்த நாளுக்கு தேவையான முழு பலத்தையும் தூக்கம் தான் தருகிறது.

நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கு குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவளிக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிறந்தது முதல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தூக்கம் மிகவும் முக்கியமானது.

முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்புகளுடன், சிறு குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் நோய்வாய்ப்படுகிறார்கள், குறிப்பாக அவர்கள் பள்ளி வாழ்க்கையில் நுழைந்தவுடன் அல்லது நோய்த்தொற்று உள்ள பிற குழந்தைகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும்போது.

வயதுக்கு ஏற்ற தூக்கம் அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு பெரும் தடையாக செயல்படும்.

வாழ்க்கையின் முதல் சில வருடங்கள் ஒரு வலுவான உள் அமைப்பு மற்றும் வலுவான குடல் ஆரோக்கியத்தை வளர்ப்பதில் முக்கியமானவை, இதற்கு அமைதியான தூக்கம் முக்கியமானது. குழந்தைகள் தூங்கும் நேரத்தில் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.

சைட்டோகைன்கள் இணைப்பு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்லீப் ஃபவுண்டேஷன் அறிக்கை கூறுகிறது:

போதுமான தூக்கம் இல்லாமல், உங்கள் உடல் குறைவான சைட்டோகைன்களை உருவாக்குகிறது, இது நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு வகை புரதமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை திறம்பட உருவாக்குகிறது.

சைட்டோகைன்கள் உறக்கத்தின் போது உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன, நீங்கள் கண்களை மூடாமல் இருந்தால் இது இரட்டிப்புத் தாக்கத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட தூக்கமின்மை உங்கள் உடலின் பதிலளிக்கும் திறனைக் குறைப்பதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கிறது.

தூக்கமின்மையால்’ குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை இழக்கின்றனர். இது உடலை பலவீனப்படுத்துகிறது.

போதுமான தூக்கம் பெறாத அல்லது இரவில் குறைவாக தூங்கும் குழந்தைகள், போதுமான தூக்கம் மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் குழந்தைகளை விட தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வு காட்டுகிறது.

சூரியன் மறையும் போது, ​​​​நம் உடல்கள் உயிரியல் ரீதியாக, ஓய்வெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதனால்தான் குழந்தைகள் சீக்கிரம் தூங்குவது முக்கியம்- இது உடல் அதன் இயற்கையான சர்க்காடியன் தாளத்தைப் பின்பற்ற அனுமதிக்கிறது.

குழந்தைகளை சரியான நேரத்தில் படுக்க வைக்காதபோது, ​​அவர்களின் உடல் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை வெளியிடுகிறது, இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

மந்திர நுண்ணுயிர்

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு, நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவான நுண்ணுயிரிகளின் நியாயமான விநியோகம் உங்களுக்குத் தேவை, இது நமது சர்க்காடியன் தாளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

எளிமையாகச் சொன்னால், குழந்தைகள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், குடல் பாக்டீரியாவால், அவர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்துக்களை ஜீரணிக்க முடியாது. ஒரு தீய சுழற்சியில், மோசமான குடல் ஆரோக்கியம் தூக்கத்தை எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் தூக்க இழப்புக்கு வழிவகுக்கிறது.

குழந்தைகள் தூங்கும்போது, ​​அவை சீக்கிரம் வளரும். எனவே குழந்தையின் வாழ்க்கையில்’ நன்கு வளர்ந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு தூக்கம் இன்றியமையாதது.

நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை நாம் உறக்கத்தில் செலவிடுகிறோம். எனவே உங்கள் பிள்ளைகள் உறக்கத்தை வலுப்படுத்தவும், அவர்கள் உயருவதைப் பார்க்கவும் உதவுங்கள்.

(Extracted with permission from Penguin Random House India)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Children health sleeps and babies immunity