குழந்தைகளின் காது கேளா தன்மையை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்…

குழந்தைகள் காதுகேளா தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் நல மருத்துவரிடம் அல்லது காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

By: June 28, 2020, 3:40:08 PM

“செல்ககளில் உள்ள ஒலி அலைகளை, மின்னணு அலைகளாக மாற்றித் தரும் கோக்லியர் எனப்படும் வால்நரம்பு ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டால், அது காதுகேட்கும் திறனையும் பாதிக்கும்,” என்கிறார் மருத்துவர் ஜெ.எம்.ஹான்ஸ்

நமது பிற உடல் உறுப்புகளைப் போல, காதுகளும் முறையாக பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஒரு உடல் அனைத்து விதமான புலன்களையும் முன்னெடுப்பதற்கு சில காலம் பிடிக்கும். அதன்காரணமாகத்தான் பிறவியிலேயே ஏற்படும் காது கேளா தன்மை அல்லது கேட்கும் திறன் குறைபாடு உடனடியாகத் தெரியவருவதில்லை. மதுக்கர் ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையின் கோக்லியர் பொருத்தும் சிகிச்சைக்கான மூத்த குழந்தைகள் நல மருத்துவர் ஜே.எம். ஹான்ஸுடன், அண்மையில் நடைபெற்ற ‘எக்ஸ்பிரஸ் பேரண்டிங்’ என்ற முகநூல் நேரலையில் இது குறித்து விவாதித்தோம். அப்போது அவர், குழந்தைகளிடம் நிலவும் காதுகேளா தன்மையை முன் கூட்டியே கண்டறிவது, எப்போது கோக்லியர் பொருத்தும் சிகிச்சை தேவை என்பது குறித்து கூறினார். அதில் இருந்து சில பகுதிகள்.

குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கும்போதே ஏழாவது மாத த்திலிருந்து கேட்கும் திறனைப் பெறுகின்றனர். குழந்தைகளின் காதுகளின் உள் மற்றும் வெளிப்பகுதிகள், காதுகளின் பிற பகுதிகள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடக்கும்போது ஏதாவது ஒன்று தவறுதலாக நிகழும் பட்சத்தில், கோக்லியரை பொறுத்தவரை, எதுவும் செய்ய முடியாது.
“செல்ககளில் உள்ள ஒலி அலைகளை, மின்னணு அலைகளாக மாற்றித் தரும் கோக்லியர் என்ற வால்நரம்பு ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டால், அது காதுகேட்கும் திறனையும் பாதிக்கும்,” என்கிறார் அவர்.

மேலும் அவர் கூறுகையில் “வெவ்வேறு விதமான காதுகேளாமைகளில் நான்கு வகைகள் இருக்கின்றன. பிறவியில் காதுகேளாமை, மொழி அறிவதற்கு முந்தைய காதுகேளாமை(குழந்தைகள் பேசத்தொடங்குவதற்கு முன்பே ஏற்படுவது), பேச்சு மற்றும் மொழியின் வளர்ச்சியின்போது ஏற்படும் காதுகேளாமை(குழந்தைகள் கேட்கத் தொடங்கும் போது அல்லது ஏதாவது பேசத்தொடங்கும்போது, அதற்கு முன்பே காதுகேளா நிலை ஏற்படுதல்), மொழிக்குப் பிந்தைய காதுகேளாமை(குழந்தைகள் கேட்கும், பேசும் திறன் நன்றாக இருக்கும். பின்னர், வைரஸ் தொற்றுகள், மருந்துகள், அதிர்ச்சி, குண்டு வெடிப்பு காயங்கள் உள்ளிட்ட ஏதாவது சில காரணங்களால் காதுகேளாமல் போவது நிகழ்கிறது.)

கோக்லியர் பொருத்தும் சிகிச்சை எவ்வாறு உதவுகிறது?

“இது செவி வழி கருத்தை, பேசுவதை புரிந்து கொள்ளுதல், பேச்சுகளின் அமைப்பை அறிய நமக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு குழந்தையை இயக்கும்போது, அது பத்து வயதாக இருக்கும்போது அது பிறவியில் இருந்தே காதுகேளாத தன்மையைக் கொண்டிருந்தால், அந்த குழந்தையால் கேட்க மட்டுமே முடியும். புரிந்து கொள்வதற்கோ அல்லது பேசுவதற்கோ முடியாமல் இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு பேசுவதற்கான தெரபி பயிற்சிகள் கொடுக்கப்படுவதை நாம் பார்த்திருக்கலாம். அத்தகைய குழந்தைகள் பிற்கால வயதினரிடமிருந்தும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால், அதே குழந்தை18 வயதாக இருந்தால், அப்போது வேறு வழிகள் இல்லை. செவிவழி கருத்து மட்டுமே இருக்கும்,” என்று விவரிக்கிறார்.

வழக்கமான காது கேட்கும் கருவியில் இருந்து கோக்லியர் பொருத்துவதில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

“ஒரு காதுகேட்கும் கருவியை, ஒரு வெளி கருவியாகத்தான் கொடுக்க முடியும். இது ஒலியை அதிகரித்துத் தரும். ஆனால், சில நேரங்களில் மண்டை ஓட்டில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அந்த மின்முனை கோக்லியருக்குள் செல்கிறது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக உள்பக்கம் பொருத்துவதுடன், வெளிப்புறமும் ஒரு கருவி இருக்கும். மண்டைக்குள் இருக்கும் சாதனத்தில் வெளியே இருக்கும் சாதனத்தில் ஒரு காந்தம் உள்ளது. அவைகள் இணையும்போது ஒலியானது மைக்ரோபோனில் சேகரிக்கப்படும். ரேடியோ அதிர்வண் மூலம் அது டிஜிட்டல் ஒலியாக மாற்றப்படும். இது உள்ளிருக்கும் கருவியில் கொடுக்கப்படும்போது , வெளி பேச்சு செயலியின் பேட்டரியுடன் பணிபுரியும்,” என்று விவரிக்கிறார்.

இதர விஷயங்களுக்கு மத்தியில், மருத்துவர் ஹான்ஸ் கூறுகையில், “குழந்தைகள் காதுகேளா தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் நல மருத்துவரிடம் அல்லது காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அதோடு தொடர்புடைய பிரச்னைகளா என்று மருத்துவர்களால்தான் சொல்ல முடியும், “குழந்தையாக இருக்கும்போதே காதுகேளா தன்மைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, எங்களிடம் நிபுணத்துவம் வாய்ந்த பேட்டரி இருக்கிறது. எங்களிடம் குழந்தைகள் நல மருத்துவர், ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு நரம்பியல் நிபுணர், இருதய நோய் நிபுணர், மறுவாழ்வு நிபுணர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் இருக்கின்றனர். நரம்பு சரியானதாக இருக்கிறதா? அது சரியானதுதானா? என கோச்லரின் நிலையைப் புரந்து கொள்ளும் கதிரியக்க நிபுணர் நமக்குத் தேவை. இதுதான் பிரச்னை, இதுதான் முன் கணிப்பு என்று சொல்வதற்கு முன்பு இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், “ என்றார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Children hearing inpaired hearing loss hearing ability hearing aids cochlear implants

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X