குழந்தைகள், பெற்றோரின் வீட்டு வேலைகளுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் அறிவுக்கூர்மையோடு இருக்க முடியும். கணக்குத் திறனை வளர்த்தெடுப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் வேடிக்கையான முறையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கான பட்டியல் தயாரிக்கச் சொல்லலாம்.
பங்கஜ் குமார் சிங்
கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகள் தொடர்ந்து தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள ஆர்வமான விஷயங்களில் ஈடுபட விரும்புவார்கள். வெளியூர் செல்வது, சுற்றுலா செல்வது மற்றும் பிற இடங்களுக்கு செல்வது என்பதெல்லாம் வழக்கமாக நாம் செய்யும் விடுமுறைகால உற்சாகங்கள். ஆனால் இவைகளை விடவும், விடுமுறை நாளை என்றென்றும் நினைவு கூறும் வகையிலான மேலும் சில வழிகள் இருக்கின்றன. குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்து பணியாற்றும் பெற்றோருக்கு குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் தாங்களே சொந்தமாக கோடை கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. உங்கள் குழந்தை வேடிக்கையாக இருப்பதற்கும் அவர்களின் நினைவுத்திறனை அதிகரிப்பதற்குமான 5 கோடைகால செயல்பாடுகள் உங்களுக்கு உதவக் கூடும்.
ஆண்டின் மிகச்சிறந்த நினைவுகளை கொண்ட ஒரு நினைவு புத்தகத்தை தயாரியுங்கள்
ஒரு ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் ,நல்ல நண்பர்கள், குழந்தைகள் விரும்பும் நல்ல நண்பர்களுக்கான அடையாளங்கள், குழந்தைகளின் விருப்பமான உணவு, விடுமுறை கொண்டாட்டத்துக்கு சென்ற ஊர்கள் உள்ளிட்ட மேலும் பல நிகழ்வுகளை கொண்ட புத்தகத்தை உருவாக்க அவர்களுக்கு வழிகாட்டலாம். குழந்தைகளின் மனநலனை பெற்றோர் புரிந்து கொள்வதற்கும், பாடங்களைத் தாண்டி அவர்கள் ஈடுபாடு காட்டவும் இது உதவியாக இருக்கும்.
அகரவரிசை விளையாட்டுகள்,எண் விளையாட்டுகள்
மளிகைப்பொருட்கள் வாங்க பக்கத்தில் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வண்டியில் வெளியே செல்லும்போது, சில விளையாட்டுகள் மூலம் உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை மேம்படுத்த முடியும். ஆங்கில அகரவரிசையில் ஏ முதல் இசட் வரை தொடங்கும் பெயர்பலகையில் இருக்கும் வார்த்தைகளை சொல்லி, விடுபட்ட வார்த்தைகளை உங்கள் குழந்தைகளை முடிக்கும்படி சொல்லலாம். இந்த மாறுபாடான அகரவரிசை விளையாட்டை முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருக்கும்போது அகரவரிசை விளையாட்டில் அவர்களோடு இணைந்து விளையாடும் போது அவர்களின் சொல்லகராதி திறன்களை மேம்படுத்த முடியும்.
மளிகைப் பொருட்கள் பட்டியல் உருவாக்குதல்
குழந்தைகள், பெற்றோரின் வீட்டு வேலைகளுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் அறிவுக்கூர்மையோடு இருக்க முடியும். கணக்குத் திறனை வளர்த்தெடுப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் வேடிக்கையான முறையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கான பட்டியல் தயாரிக்கச் சொல்லலாம். நல்ல நுண்ணூட்டசத்து எது என்பது பற்றி உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இது இருக்கும். குடும்பத்தின் திட்டத்தில் நாமும் பங்கு பெற்றிருக்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். அவர்கள் மனதுக்கும் பயிற்சியாக இருக்கும்.
போர்டு விளையாட்டுகள் மற்றும் இதர உள் விளையாட்டுகள்
நல்ல பழைய போர்டு விளையாட்டுகள், கார்டு விளையாட்டுகள் போன்றவை உங்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.நீங்கள் வேலையில் இருக்கும்போது உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். எனினும், சில விளையாட்டுகளில் வீடுகளில் விளையாடினாலும், உங்கள் குழந்தையுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து விளையாட வேண்டிய தேவை இருக்கும். (விளையாட்டு தேதியை சிந்திக்கலாம்) எனினும், ஒருவர் மட்டுமே பங்குபெறக் கூடிய மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தினால் ஒரே ஒரு குழந்தையாக இருந்தாலும் இந்த கோடை காலத்தில் அந்தகுழந்தை சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு சீட்டுக்கட்டில் எத்தனை விஷயங்களை குழந்தை செய்கிறது என்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.உங்கள் குழந்தை வெளியே கவனிப்பார் இல்லாமல் விளையாடும் அளவுக்கு பக்குவப்பட்டது என்றால் , ஒருவருக்கு ஒருவர் ஓடி விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டியதில்லை.
புதிர்கள்
அனைத்து நீண்ட கோடை விடுமுறைகளிலும், வீட்டில் எங்காவது புதிர் விளையாட்டுகள் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும். புதிர்கள் அடங்கிய புத்தங்களை தயாராக வைத்திருங்கள். புதிர்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சில குழந்தைகள் பிற குழந்தைகளை விட புதிர்களில் ஆர்வமாக இருக்கும். ஒரு நாள் முழுவதும் புதிர்களிலேயே நேரத்தைச்செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொரு நாளும் கொஞ்சம்பெரிய புதிர்களை மட்டுமே செய்ய முடியும் அல்லது 100 புதிர்களை ஒரே நேரத்தில் வைத்துக் கொண்டு முடிக்கச் சொல்வது குழந்தைகளை சலிப்படையச்செய்யும். எனினும், புதிர் செயலிகள் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் அதே போல மேலும் சில மின்னணு விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தலாம். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகள் அதிக நேரம் மின்னணு சாதனங்களின் ஸ்கீரினில் நேரம்செலவழிப்பதை தவிர்க்க பெற்றோர்கள் கெடிகாரத்திலும் கொஞ்சம் கவனம் வைத்திருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை மறந்து விட வேண்டாம்
உடல் ரீதியாக ஓடிஆடும் குழந்தைகளைத் தடுக்க வேண்டாம்
மூளையை மட்டும் சுறுசுறுப்பாக வைத்திருக்காமல், உங்கள் குழந்தைகளின் உடற் செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த கோடை காலத்தில் நீங்கள் உறுதி செய்யுங்கள்.
உடற்பயிற்சி உங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மனதை புதுப்பிக்கும், உடலின் ஹார்மோன்களை இயங்கச் செய்து உங்கள் உணர்வை மேம்படுத்தும் அல்லது நல்ல உணர்வை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை உடலில் தூண்டும். பைக் ஓட்டுவது, ஓடுதல், நடத்தல், நீச்சல், நடனமாடுவதைக் கூட செய்யலாம்.
ஒரு ஆரோக்கியமான உடல்+ஆரோக்கியமான மனம்=ஆரோக்கிய வாழ்க்கை என்பதை மறந்து விட வேண்டாம்.
பல்வேறு அதலெடிக்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் கோடைகால விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். அதே நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கும், முறையான ஊட்டசத்து உணவுகளை உண்பதற்கும் மறந்து விடக்கூடாது.
இளைஞர்களுக்கான இந்த கோடைகால செயல்பாடுகள் எளிதாக இருக்கும். வேடிக்கையாக மட்டுமின்றி பள்ளியில் இருந்து வெளியே இருக்கும்போது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும். இதில் முக்கியமானது உந்துதலாக இருப்பதுதான்.
(கட்டுரையின் எழுத்தாளர் கேம்பிரிட்ஜ் மாண்டிசோரி ப்ரீ ஸ்கூலின் நிர்வாக இயக்குநர்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil