Advertisment

நவம்பரில் வெளியான குழந்தைகளுக்கான புத்தகங்கள்!

நம்பமுடியாத உண்மைகள் மூலம் ஒரு புதிய உலகிற்கே உங்களை அழைத்துச் செல்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Childrens books released in november

Childrens books released in november

குழப்பத்தில் தடுமாறும் பூனை பற்றிய கதை முதல் மருத்துவத் துறையின் அற்புதமான கண்டுபிடிப்புகள் வரையிலான அனைத்தும் குழந்தைகளை குறி வைத்து நவம்பர் 2019 இல் நடத்தப் பட்ட புத்தக கண்காட்சியில் வெளியிடப் பட்டன. இது குழந்தைகளை குதூகலமடையச் செய்துள்ளது.

Advertisment

பாட புத்தகங்கள் முதல் கவிதைகள் வரை, உங்கள் குழந்தைகளுக்காக 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட புத்தக கண்காட்சியில் நீங்கள் தேர்வு செய்யலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பட்டியலில் இருந்தும் அவர்களின் வயதுக்கேற்பவும் நீங்கள் புத்தகங்களை தேர்வு செய்யலாம்.

பாரத் சேகர் எழுதிய முதலையின் பற்கள் (வயது 4+)

இந்த புத்தகம் சௌமியா மேனனால் சித்திரமாக்கப் பட்டது. இப்போது வயதாகிவிட்டதால் பற்கள் இல்லாமல் இருக்கும் ஒரு முதலையின் துயரங்கள் இதில் விளக்கப் பட்டுள்ளன. இதை வெளியிட்டது துலிகா பதிப்பக நிறுவனம்.

ஜெர்ரி பிண்டோ எழுதிய அன்யா மற்றும் அவளது தம்பி (வயது 5+)

இந்த புத்தகத்தின் தலைப்பே கதையை சொல்லிவிடும். பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்ந்து வரும் அன்யா தனக்கு ஒரு தம்பி பிறந்த பிறகு அடைந்த மகிழ்ச்சியற்ற நிலையை உணர்த்துவது தான் ஜெரி பின்டோவின் நோக்கம். இதை வெளியிட்டது துலிகா பதிப்பக நிறுவனம்.

அனுஷ்கா ரவிசங்கர் எழுதிய வால் கதைகள் (வயது 6+)

கதாசிரியரின் இந்த வால் கதைகளில் ஒரு பூனை தனக்கு புதிதாக இன்னொரு வால் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை தேடுகிறது. இது ஒரு வித்தியாசமான அனுபவம் குழந்தைகளுக்கு. இந்த கதையில் வரும் படங்கள் இது துஷார் வயேதா மற்றும் மயூர் வயேதா ஆகியோரால் விளக்கப்பட்டுள்ளது. இது தாரா புக்ஸ் நிறுவன வெளியீடு.

தனு ஸ்ரீ சிங் எழுதிய இருள் (வயது 5+)

அனியின் வாழ்க்கை இருள் நிறைந்தது. அவரது நண்பர்கள் அவரது பக்கத்தில் இருந்தனர், ஆனால் அவர் அவர்களிடமிருந்து எப்படி விலகினார் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த புத்தகத்தை சந்தியா பிரபாத் தனது படங்களால் விளக்கியிருப்பது அருமை. இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது பஃபின் நிறுவனம்.

ரூபா பை எழுதிய Leeches to slug glue புத்தகம் (வயது 12+)

உடற்கூறியல் குறித்த ஆய்வுக்கு வித்திட்டது ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. மனித உடற்கூறியல் ஆய்வுக்கு தனது ஓவியங்கள் மூலம் பங்களித்தது பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இத்தாலிய கலைஞர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த புத்தகம் மருத்துவத்தின் பரிணாமத்தை வெளிப்படுத்துகிறது, 2,500 ஆண்டுகால மனித வரலாறு மற்றும் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் துறையில் வளர்ச்சியை கற்றுக் கொடுக்கிறது. பஃபின் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

தீபக் தலால் எழுதிய கோல்டன் ஈகிள் (வயது 8+)

ஒரு நிலவொளி இரவில் ஷிகர் என்ற ஒரு அணில் தனது புறாக்களான லவ்வியையும் டோவியையும் ஒரு கதையை விவரிக்கச் சொல்கிறது. புறாக்களும் ஒரு மர்மமான பறவை குறித்து வித்தியாசமான ஒரு கதையை சொல்கின்றன. பஃபின் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

அசுரக் குழந்தை இன்று என்ன சாப்பிட்டது? எழுதியவர் சம்பூர்ண சட்டர்ஜி (வயது 4+)

விபா சூர்யாவால் ஓவிய உரை தரப்பட்டிருக்கும் இந்த புத்தகம், குழந்தையின் கற்பனையை உயிர்ப்பிக்க வித்தியாசமாக உயர்வு நவிற்சி அணியை பயன் படுத்துகிறது. இது குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இதை வெளியிட்டிருப்பது கரடிக்கதைகள் நிறுவனம்.

லாவண்யா கார்த்திக் எழுதிய STAR TRUCK (வயது 7+)

இந்த புத்தகத்தில் ஆசிரியர் நம்மை விண்ணுலகத்துக்கே அழைத்து செல்கிறார். அது ஒரு மகிழ்ச்சியான பயணமாகவும் இருக்கிறது . இதற்கான ஓவியங்களை தீட்டியவர்கள் கார்த்திக் மற்றும் அபிலாஷா திவான். இதை வெளியிட்டிருப்பது கரடிக்கதைகள் நிறுவனம்.

வீணா பிரசாத் எழுதிய அனைத்தையும் மாற்றிய தீப்பொறி (வயது 11+)

இந்த புத்தகம் சில அற்புதமான கண்டுபிடிப்புகள் மற்றும் பல ஆண்டுகளாக நடந்த நம்பமுடியாத உண்மைகள் மூலம் ஒரு புதிய உலகிற்கே உங்களை அழைத்துச் செல்கிறது. ஹச்செட் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீஜாதா குஹா மொழிபெயர்த்த சுகுமார் ரேயின் பைத்தியம் மற்றும் மந்திர உலகம் (வயது 11+)

புகழ்பெற்ற பெங்காலி எழுத்தாளர் சுகுமார் ரே தனது உளறல்கள் நிறைந்த வசனத்திற்கு பெயர் பெற்றவர். இவர் பெங்காலி மொழியில் எழுதியவரின் தொகுப்பு தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஹச்செட் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

நந்தினி சென்குப்தா எழுதிய காளிதாசனின் கதை (வயது 5+)

இது தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு சிறுவனாக காளிதாசனை விவரிக்கிறது. ஆனால் விதியின் ஒரு திருப்பமாக காளிதாசன் அரசனின் நம்பிக்கையை பெற்று அரண்மனைக்குள் நுழைவது தான் கதை. இந்த புத்தகத்தை ரிதுபர்ணா சர்க்கார் மற்றும் ஹிடேஷ் சோனார் ஓவியங்கள் மூலம் சிறப்பிக்கின்றனர். கூடர்த் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

கர்ணனின் கதை: ஷுமிதா சர்மா தேவேஸ்வர் எழுதி வள்ளல் கர்ணன் (வயது 4+)

பியா ஆலிஸ் ஹசாரிகாவால் வரையப் பட்ட கர்ணனின் கதை தனது கனவுகளை நனவுகளாக்க ஒரு சிறுவன் போராடுவது குறித்து விளக்குகிறது. பயணத்தின் இறுதியில் அவன் ஒரு கதாநாயனாக வெளிப்படுவதே கதை. கூடர்த் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - Children’s books released in November 2019

இதனை தமிழில் மொழி பெயர்த்தவர் - த.வளவன் 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment