Advertisment

Children’s Day 2022: குழந்தைகள் தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?

Children's Day is celebrated on November 14: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
Nov 13, 2022 15:25 IST
Children’s Day 2022: குழந்தைகள் தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?

Children's Day

Happy Children’s Day 2022 | குழந்தைகள் தினம் என்றாலே மகிழ்ச்சி தான். பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பள்ளிகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். அந்நாள் முழுவதும் சிறப்பானதாக இருக்கும்.

Advertisment

குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார். இந்த ஆண்டு குழந்தைகள் தினம் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்

இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர்.

இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன.

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று நேரு கூறினார். 1956-ம் ஆண்டு முதல் நவம்பர் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி ‘உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

பிறகு 1964-ம் ஆண்டு பண்டிட் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jawaharlal Nehru #Children
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment