/indian-express-tamil/media/media_files/2024/11/13/jgxYSlPR4p2PxWBblYwB.jpg)
நமது தேசத்தின் குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதே நாளில் தான் நம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையும் நாம் நினைவுகூருகிறோம். அவர், குழந்தைகள் மீது கொண்ட அன்புக்காக பெயர் பெற்றவர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Children’s Day 2024: Know the date, history, celebrations, and significance of Bal Diwas
நேரு ஒவ்வொரு குழந்தையையும் நாட்டின் எதிர்காலமாகப் பார்த்தார், அவர்களுக்கு முழு மனதுடன் மதிப்பளித்தார்.
"குழந்தைகள் ஒரு தோட்டத்தில் மொட்டுகளைப் போன்றவர்கள். அவர்கள் கவனமாகவும், அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள்" என்று நேரு தனது விரிவுரை ஒன்றில் கூறினார்.
எனவே நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேசத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பல இளைஞர்கள் நேருவை அன்போடு 'சாச்சா நேரு' என்று அழைத்தனர்.
இப்பதிவில் குழந்தைகள் தினத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினக் கொண்டாட்டம் 1956 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கினாலும், அதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20-ஆம் தேதியை 'உலகளாவிய குழந்தைகள் தினமாக' அனுசரித்தது.
இருப்பினும், 1964 இல் நேரு மறைந்த பின்னர், இந்திய அரசு அவரது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு செய்தது.
அதன் பின்னர், நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் ஐநா பொதுச் சபை தலைமையிலான உலகளாவிய குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் உரிமைகளை இத்தினம் ஊக்குவிக்கிறது. மேலும், குழந்தைகளின் தேவைகள் மற்றும் குரலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து இத்தினம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.