இன்று, பிறந்த குழந்தைகள் முதல் பதின்ம வயதினர் வரை அருமையான குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளன, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியானவற்றைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்குகிறார்கள். அதைவிட, புத்தகங்களைப் பகிர்வதும் விவாதிப்பதும் முதன்மையானதாகிவிட்டது.
எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதல்ல, அதை எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறோம் என்பது, முக்கியமானது, என்று கூறுகிறார் இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஜாய் விட்டேக்கர்.
கதைகளில் என்ன நடக்கிறது என்று குழந்தைகள் முன்பை விட அதிகமாக கேள்வி கேட்பதால், ‘willing suspension of disbelief’ என்ற பழமையான கோட்பாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் நாட்டார் கதைகள் கூட விளக்கங்களும் தர்க்கரீதியான நியாயங்களும் தேவைப்படுகின்றன.
எனவே ஒரு கதைசொல்லி தனது வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும், கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்தவும் கதையை மீண்டும் எழுத வேண்டும், குறிப்பாக இப்போது மின்னணு கதை சொல்லும் முறைகள் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கின்றன, என்கிறார் ஃபோக் டேல்ஸ் ஆஃப் உத்தரகாண்ட், தி டீனேஜ் டைரி ஆஃப் நூர்ஜஹான் போன்ற புத்தகங்களை எழுதியுள்ள தீபா
மற்ற நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி படிப்பது மனதை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் புரிதலையும் மேம்படுத்துகிறது. அறிவு வளர்ச்சி, தகவல் தொடர்பு திறன்களை அதிகரித்தல், கவனம், படைப்பாற்றலை மேம்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற பொதுவாகக் குறிப்பிடப்பட்ட நன்மைகளை சொல்ல்லாம்.
கூடிய விரைவில் தொடங்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/wxn6WBtp65dewD9R8Tof.jpg)
தாலாட்டுப் பாடல்கள் பாடுவது, ரைம்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது மற்றும் உரக்கப் படிப்பதன் மூலம் பெற்றோர்கள் கூடிய விரைவில் இதை தொடங்க வேண்டும். இது புத்தகங்களுடன் வாழ்நாள் தொடர்பை வளர்க்கிறது.
புத்தகங்களை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது, கதைகளுக்கு தங்கள் குழந்தையின் ரெஸ்பான்சை பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தையுடன் தரமான நேரத்தை செலவிடும் விதமாக வார்த்தைகளையும் வாக்கியங்களையும் புரிந்து கொள்ளக் கற்றுக்கொண்ட பிறகும், சத்தமாக வாசிப்பது தொடர வேண்டும், என்று தீபா கூறினார்.
இணைய கதைகள்
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், பெரிய கண்டுபிடிப்புகளை நாம் காணலாம். இருந்தபோதிலும், வாசிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
புத்தகங்கள் அல்லது வாய்வழி கதைசொல்லலில் இன்றைய குழந்தைகளுக்கு ஆர்வமில்லை. ஆனால் அவர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு ஊடகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஆனால் புத்தகத்தில் படித்தால் கிடைக்கும் பலன்களுக்கு மாற்று இல்லை என்று நான் உணர்கிறேன், என்கிறார் தீபா.
நமக்கு அதிக விளையாட்டு புனைகதைகள், கற்பனை கதைகள் (home-grown fantasy) தேவை.
பல சிறந்த புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இளம் வயதினருக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவைப்படுகிறது, ஏனெனில் புத்தகங்களில் பதின்வயது பிரச்சனைகளை ஆராய்வது இந்த பாதிக்கப்படக்கூடிய வயதில் ஒரு வகையான ஆதரவாக இருக்கும். நான்- ஃபிக்ஷன் எழுத்தில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன, என்று தீபா கூறினார். அவரது சமீபத்திய புத்தகமான Arthashastra குழந்தைகளுக்கானது.
குழந்தைகள் தங்கள் பாடப்புத்தகங்களுக்கு வெளியே அரசாங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன அல்லது வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். தொழில் வாய்ப்புகள் பற்றிய கூடுதல் தகவல் புத்தகங்கள், நிஜ வாழ்க்கைக் கதைகள் பயனுள்ளதாக இருக்கும், என்றார் தீபா.
இந்த முக்கியமான உரையாடல்கள், நவம்பர் 24-25, 2023 தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் உள்ள சுந்தர் நர்சரியில் காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற உள்ள புக்காரூ குழந்தைகள் விழாவின் 15வது பதிப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதைப் பற்றி பேசிய தீபா, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் புக்காரூ ஒரு முக்கிய நிகழ்வாகும் என்றார். தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திப்பது, அவர்களின் புத்தகங்களைப் பற்றி அவர்கள் பேசுவதைக் கேட்பது, புத்தகங்களில் கையெழுத்திடுவது இளம் புத்தகப் பிரியர்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைகிறது. புக்காரூ குழந்தைகளுக்கான புத்தக வெளியீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது வெளியீட்டாளர்களுக்கு புத்தகங்களை காட்சிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
குழந்தைகளுக்கான புத்தக வெளியீடு வெகுதூரம் வந்துவிட்டது. இருப்பினும், நமது பரந்த மக்கள்தொகை மற்றும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போது, புத்தக விற்பனை ஊக்கமளிப்பதாக இல்லை.
இந்திய எழுத்தாளர்களின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பெரியவர்களுக்கான புத்தகங்களைப் போல தீவிரமாக சந்தைப்படுத்தப்படுவதில்லை.
குழந்தைகளுக்காக ஒரு புத்தகம் எழுதுவது ஒரு விளையாட்டு, அதை எழுதுவது மிகவும் எளிது என்ற துரதிர்ஷ்டவசமான அனுமானமும் உள்ளது. இது மாற்றப்பட வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கான எழுத்து ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற வேண்டும், என்று தீபா முடித்தார்.
Read in English: How storytelling for children has evolved
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“