ஒரு முறை சில்லி உருளைக்கிழங்கு பைட்ஸ் செய்து சாப்பிடுங்க. செம்ம சுவையா இருக்கும்.
செய்முறை
உருளைக்கிழங்கு- 3
பூண்டு – 2
உப்பு -1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு பொடி- ½ டேபிள் ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி
மைதா- ¼ கப்
கான்பிளவர்- 1 டேபிள் ஸ்பூன்
பிரட் கிரம்ஸ் – ½ கப்
எண்ணெய்
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து துருவிக் கொள்ளவும். துருவிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்தகொள்ளவும். தொடர்ந்து அதில் உப்பு, மிளகு பொடி, சில்லி பிளேக்ஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மைதா, கான்பிளவர், பிரட் கிரம்ஸ் சேர்த்து பிசையவும். தொடர்ந்து இதை 30 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். தொடர்ந்து நீளமாக அளவு மாவை மாற்ற வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தில் கான்பிளவர், மைதா தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். அதில் இந்த துண்டுகளை முக்க வேண்டும். தொடர்ந்து பிரட் கிரம்ஸில் முக்க வேண்டும். தொடர்ந்து எண்ணெய்யில் இதை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“