Advertisment

இதுவரை நான் விக் வைத்தது இல்லை - சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!

Chithi 2 Actress Meera Krishna Hair growth Tips Tamil News அதேபோல வாரத்திற்கு மூன்றுமுறை தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிப்பதுண்டு.

author-image
WebDesk
Jul 28, 2021 17:51 IST
Chithi 2 Actress Meera Krishna Hair growth Tips Tamil News

Chithi 2 Actress Meera Krishna Hair growth Tips Tamil News

Chithi 2 Actress Meera Krishna Hair growth Tips Tamil News : சித்தி 2 உள்ளிட்ட சில தமிழ் நெடுந்தொடர்களில் அப்பாவி அம்மா மற்றும் மோசமான மாமியாராக நடித்துப் பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் மீரா கிருஷ்ணா. கேரளாவிலிருந்து வந்தாலும், ஏராளமான தமிழ் தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவருடைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு முறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
publive-image

"நான் பியூட்டி பார்லர் அதிகம் போகமாட்டான். வீட்டிலேயேதான் என்னுடைய சரும பராமரிப்பு எல்லாம். அதிலும், இயற்கை பொருள்களைதான் முடிந்தவரை உபயோகிப்பேன். சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்காகச் சின்ன வயதில் என்னவெல்லாம் செய்தோமோ, அதைத்தான் இப்பொழுதும் பினற்றி வருகிறேன்.

publive-image

அந்த வரிசையில் ஃப்ரெஷ் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய், சருமம் மற்றும் கூந்தலுக்கு நான் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள். வாரத்திற்கு ஒருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பேன். அதேபோல வாரத்திற்கு மூன்றுமுறை தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிப்பதுண்டு. இதுவரை நான் விக் அல்லது எக்ஸ்டரா முடி வைத்தது இல்லை. என்னுடைய ஒரிஜினல் முடிதான்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு, கற்றாழை மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, வீட்டிலேயே காய்ச்சும் ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அதில், வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ, அதன் இலை, கொய்யா இலை உள்ளிட்டவற்றைச் சேர்த்து நன்கு காய்ச்சு வடிகட்டி ஆறவைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள். இந்த எண்ணெய்யைத்தான் நான் தேய்த்து வருகிறேன்".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment