Chithi 2 On Sun Tv : தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஏராளமான மெகா தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களை சின்னத்திரை ரசிகர்களாக்கியதற்கான பெரும்பங்கு, ‘சித்தி’ சீரியலையே சாரும்.
Advertisment
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
Advertisment
Advertisements
”கண்ணின்மணி.. கண்ணின்மணி” என்ற அதன் பாட்டு ஒளிபரப்பானதும், எந்த வேலை செய்துக் கொண்டிருந்தாலும், அத்தனையையும் விட்டு விட்டு டிவி முன்னாடி ஆஜராகி விடுவார்கள். 1999ம் ஆண்டு ஒளிபரப்பை தொடங்கிய சித்தி மெகா தொடர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் டிவி முன்பு கட்டிப் போட்டது. ஆண்கள், பெண்கள் பேதமின்றி வரிசைக் கட்டி ரசித்த தொடர் இது.
தமிழ் டிவி உலகின் மறக்க முடியாத நெடுந்தொடர்களில் இத்தொடருக்கு மிக முக்கிய இடம் உண்டு. ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் இந்தத் தொடர் இன்று வரை பெஸ்ட்டான தொடராக உள்ளது.
இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகி, விரைவில் ஒளிபரப்பாகவும் உள்ளது. இதுகுறித்த புரமோக்களை சன் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதுவும், அதே 'கண்ணின்மணி' டைட்டில் பாடலுடன் சித்தி 2 தொடர் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதி முதல் சன் டிவியில் தினம் இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
சித்தி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சில தொடர்களைத் தவிர்த்து, ஆண்கள் பெரிதாக டிவி சீரியல்கள் பார்ப்பதில்லை. ஆண்கள், சித்தி 2ம் பாகம் ஆண்கள் மத்தியில் மீண்டும் சீரியல் மீதான கவனத்தை திருப்பியுள்ளது.