/tamil-ie/media/media_files/uploads/2020/02/a91.jpg)
chithi 2 serial hero nandan loganathan
'லக்ஷ்மி' குறும்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து மக்களின் திட்டுக்களை வாங்கியவர் நந்தன் லோகநாதன்.
அந்த குறும்படத்தில் ஒரு குடும்பப் பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு தான் இந்த எதிர்ப்பு. ஆனால், நடிகன்-னா இயக்குனர் சொல்வதைத் தானே கேட்கணும். அதைத் தான் நந்தனும் செய்தார். ஆனால், ரிசல்ட் என்னவோ பொல்லாப்பு தான். இருப்பினும், அந்த அளவுக்கு நடிப்பு நன்றாக இருந்ததால் தானே மக்கள் திட்டினார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். அந்த நந்தன் தான் இப்போது ராதிகா நடித்து வரும் 'சித்தி 2' சீரியலின் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தி எனும் மாபெரும் பிராண்ட்டிற்குள் நுழைந்ததும், அதுவும் ஹீரோவாக நுழைந்தது அவரை வேறு தளத்திற்கு கொண்டுச் சென்றுவிட்டது.
சித்தி 2 சீரியலில் சாக்லேட் பாய் ஹீரோவாக நடித்து பெண்களின் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், "என்னை நம்பிக் கொடுக்கும் கதாபாத்திரங்களை நிறைவா நடிச்சுக் கொடுக்கணும். நடிப்பு துறையில நிறைய கத்துக்கணும். `சித்தி 2' சீரியலுக்கு உடனே ஓகே சொன்னதுக்கு முக்கியக் காரணம் ராதிகா மேடம் சீரியல்ல நிறைய கத்துக்க முடியும்னுதான். வெப் சீரீஸ், சீரியல், திரைப்படங்கள்னு இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்" என்கிறார்.
ஃபேஸ்கட் பார்த்து ஏதோ ஆந்திரா பையன்-னு நினைச்சுடாதீங்க. அக்மார்க் சென்னை பையன் தான் இவர். பிறந்து வளர்ந்தது எல்லாமே மந்தவெளிதான். லயோலா காலேஜ்லதான் படித்தவர் தான் நம்ம சித்தி 2 ஹீரோ!.
பெரிய இடத்திற்கு செல்ல வாழ்த்துகள் ப்ரோ!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.