தமிழ் திரைத்துறை பொறுத்தவரையில் பெரும்பாலும் ஸ்லிம் ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து வந்த காலம் மாறி தற்போது நிறம், உடலமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஸ்டீரியோடைப்புகளை உடைத்தெறிந்திருக்கிறது. அந்த வரிசையில் உடல் சற்று பருமனாக இருந்தாலும், தன்னுடைய கியூட் எக்ஸ்ப்ரஷனால் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறார் நேஹா மேனன். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, தற்போது சித்தி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நேஹா, பருமனாக இருப்பவர்களுக்கான சில ஃபேஷன் டிப்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்.
Advertisment
"இரண்டு வகையான க்ளென்சிங், டோனர் மற்றும் சீரம் பயன்பாடுகளோடு ஆரம்பமாகும் என்னுடைய நாள்" என்று எளிமையான அழகுக் குறிப்புடன் தொடங்குகிறார் நேஹா. "என்ன க்ரீம், சீரம் பயன்படுத்தினாலும், கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் லோஷன் அனைவரையும் பயன்படுத்தப் பரிந்துரை செய்வேன். அதிலும் வெளியே செல்லும்போது முக்கியமாகப் பயன்படுத்தப்படவேண்டிய ஒரு பொருள் இது.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நுழைந்ததும், முகம் கழுவாமல் அப்படியே தயிரை முகத்தில் அப்லை செய்து சிறிது நேரம் கழித்துக் கழுவினால், சருமத்தில் ஏற்படும் டேன் (Tan) அதாவது சீரற்ற சருமம் நீங்கும். நிச்சயம் இது ஒர்க் அவுட் ஆகும். ட்ரை பண்ணிபாருங்க.
என்னைப்போல முகம் கொழு கொழுவென இருந்தால், கான்டூரிங் செய்வது அவசியம். அதனை எப்படி செய்வது என்பதை கற்றுக்கொண்டு செய்யவேண்டும். அதேபோல, தலைமுடியை எப்போதும் வழித்து சீவக்கூடாது. முகத்தின் முன் படர்வதைப்போன்று ஹேர்ஸ்டைல் நிச்சயம் சூட் ஆகும்.
உடைகளைப் பொறுத்தவரையில், உடலை ஓட்டுகிற அளவிற்கு டைட் ஃபிட்டிங் டிரஸ் போடவே கூடாது. லூஸ் ஃபிட்டிங் உடைகள்தான் நம்முடைய பருமனான உடல்வாகை பிலர் செய்யும்" என்கிற பயனுள்ள குறிப்போடு நிறைவு செய்தார் நேஹா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"