90's பெஸ்ட் காம்பெயர்.. சூப்பர் ஸ்டார், தல, தளபதி பட நடிகை... சித்தி 2 கௌரி கேரியர் கிராஃப்
chithi serial actress: செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை என பன்முக திறமைகளை கொண்ட இவர் 25 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து வருகிறார்.
சித்தி 2 சீரியலில் யாழினியின் அம்மா கௌரியாக நடித்து வருபவர் உமா பத்மநாபன். சென்னையை சேர்ந்த இவர் SIET கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு மீடியா மீதான ஆர்வத்தில் சன்டிவியில் ஜாப் அப்ளை செய்துள்ளார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு 1990's வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பிரபலங்கள் பலரையும் நேர்காணல் செய்துள்ளார். இந்த ஷோவை 1000 எபிசோடுகளுக்கு இவரே காம்பெயரிங் பண்ணியுள்ளார். இதன் மூலம் ரொம்பவே பிரபலமாக அறியப்பட்டார். அதன்பிறகு 2000ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒரு குடும்பம் ஒரு ரகசியம், ஜெயா டிவியில் வீட்டுக்கு வீடு லூட்டி என்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2013ல் ஜீ தமிழின் ஒரு தாயின் சபதம், ஜெயா டிவியில் செல்லமே செல்லமே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். டிவியில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சினிமாவில் நடித்தார். திரைப்படங்களில் டிவியில் விவாதிப்பது போல காட்சி வந்தாலே உமாதான் நடிப்பார்.
Advertisment
1998ல் முதன் முதலாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நேர்காணல் செய்யும் கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து ஏய் ரொம்ப அழகா இருக்க, உன்னாலே உன்னாலே படத்தில் கார்த்தியின் சகோதரியாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பிறகு ரஜினியின் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் அம்மாவாக, விண்ணை தாண்டி வருவாயா சிம்புவின் அம்மாவாக நடித்தார். பிறகு தனுஷின் உத்தமபுத்திரன், நண்பன் படத்தில் ஸ்ரீகாந்தின் அம்மாவாக எமொஷனலாக நடித்திருப்பார். ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா அம்மா, ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி அம்மா, கார்த்தியின் தோழா, NGK சூர்யா அம்மா என முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். சினிமாவில் 40 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் உமா.
உமாவின் சீரியல் என்ட்ரி விஜய் டிவியில்தான். விண்ணை தாண்டி வருவாயா தொடரில் கல்யாணி என்ற கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா தொடரில் 2017 முதல் தற்போது வரை கோதாவரி என்ற ரோலில் சக்தியின் அம்மாவாக நடித்து வருகிறார். சன்டிவியின் பிரியமானவளே சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது லேட்டஸ்டாக சித்தி 2 சீரியலில் யாழினியின் அம்மாவாக நடித்து வருகிறார். ஆனால் தொடரில் உண்மையாக அவர் வெண்பாவின் அம்மா. அது தெரியாமல் ஆரம்பத்தில் வெண்பாவை பழிவாங்குவது போல் நடித்தவர், தற்போது பாசமாக நடித்து வருகிறார். சீரியலில் கௌரி கேரக்டருக்கு தனி ஃபேன்ஸ்தான்.
செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை என பன்முக திறமைகளை கொண்ட இவர் 25 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து வருகிறார். ஏராளமான குறும்படங்கள் ஆல்பம் சாங்கிலும் நடித்துள்ளார். இவருக்கு நகைச்சுவை சார்ந்த நடிப்புகளை அதிகம் வெளிப்படுத்தும் கேரடக்டரில் படங்கள் நடிப்பது ரொம்ப பிடித்தமான ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"