/indian-express-tamil/media/media_files/Cyev4DcvgQCErHpqgk3q.jpg)
Chitra Pournami 2024
இன்று சித்ரா பவுர்ணமி நன்னாள்.
அமாவாசையில் மகாளய அமாவாசை போல, தை அமாவாசை போல, ஆடி அமாவாசை போல, சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமிரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.இந்த நாளில் அம்பிகையை வழிபாடு செய்தால் திருமண வரம், மழலை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனும் பேறும் கிடைக்கும் என்கிறது தலவரலாறு. சித்ரா பௌர்ணமியில் சித்தர் பெருமக்கள் அனைவரும் வெவ்வேறு ரூபங்களில் பூமிக்கு வந்து அருள்வார்கள் என்று அகத்தியர் நூல்கள் கூறுகின்றன.
இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜை அறையையே கோயிலாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்யலாம். குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமான வழிபாடு.
எனவே இந்த நாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சித்ரா பவுர்ணமி அன்று வீட்டில் பூஜை செய்வதற்கான நேரம், வழிபாட்டு முறைகள் குறித்து பிரபல பாடகி அனிதா புஷ்பவனம் குப்புசாமி, தன் யூடியூப் வீடியோவில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
முக்கியமாக, சித்ரா பெளர்ணமியன்று இயலாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்குவதால், வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், சந்தோஷமும் குதூகலமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.