குழந்தைகளுக்குப் பிடித்தமான சாக்லேட் பால்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மில்க் சாக்லேட் பார் - 75 கிராம்
கண்டன்ஸ்டு மில்க் - 50 மில்லி
இனிப்பு கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
வால்நட், பாதாம், முந்திரி, உலர் திராட்சை- வறுத்து எடுக்கவும்
செய்முறை
சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ள வேண்டும். அதாவது, 1 பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீரில் நிரப்பி அதை கொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் சாக்லேட்டை நறுக்கி தண்ணீர் இருக்கும் பாத்திரத்தினுள் வைத்து சாக்லேட்டை உருக்கவும்.
அடுத்து அதனுடன் நட்ஸ், கண்டன்ஸ் மில்க் சேர்க்க வேண்டும். 30 நொடிகளுக்குப் பிறகு இறக்கி நன்கு கலந்துகொள்ள வேண்டும். சாக்லேட் நன்றாகக் கரைந்த பிறகு ஆறவிடவும். இதை ஒரு கரண்டியால் எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, மேலே கோகோ பவுடர் தூவி உருட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கப் கேக் லைனருக்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம். சுவையான நட்ஸ் சாக்லேட் பால்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“