சாக்கோ மில்க் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வால்நட் – அரை கப்
வெனிலா பவுடர் – அரை ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்
டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவு
கோகோ பவுடர் – 1 டீஸ்பூன்
செய்முறை
வால்நட் மற்றும் தேவையான நட்ஸ் முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இப்போது வால்நட் தவிர மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து ஒரு முறை அடித்து எடுக்கவும். இப்போது இதனுடன் சாக்லேட் பிஸ்கட் வைத்து பரிமாறினால் சுவையான சாக்கோ மில்க் ஷேக் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“