ஒரு முறை இப்படி சோளா பூரி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
மைதா- 2கப்
தயிர் - 2 ஸ்பூன்
ஆப்பசோடா - ஒரு பின்ஞ்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.