தொப்பை குறையணுமா? இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி
நீங்க உடல் பருமனா இருந்து, எடையை குறைக்க முயற்சி செய்ஞ்சுட்டு இருந்தா இந்த காய்ய கண்டிப்பா உங்க உணவுல அடிக்கடி சேர்க்கணும், என்கிறார் ஆயுர்வேத டாக்டர் மைதிலி...
நீங்க உடல் பருமனா இருந்து, எடையை குறைக்க முயற்சி செய்ஞ்சுட்டு இருந்தா இந்த காய்ய கண்டிப்பா உங்க உணவுல அடிக்கடி சேர்க்கணும், என்கிறார் ஆயுர்வேத டாக்டர் மைதிலி...
பொதுவா நம்மள பலபேருக்கு செள செள காய் அவ்ளோவா பிடிக்காது. ஆனா இதுல உங்க உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நிறைய சத்துகள் இருக்கு.
Advertisment
முக்கியமா செள செள காய்ய தொடர்ந்து உணவில் சேர்த்துட்டு வந்தா, உங்களோட எடை கட்டுக்குள் இருக்கும். நீங்க உடல் பருமனா இருந்து, எடையை குறைக்க முயற்சி பண்ணிட்டு இருந்தா இந்த காய்ய கண்டிப்பா உங்க உணவுல அடிக்கடி சேர்க்கணும், என்கிறார் ஆயுர்வேத டாக்டர் மைதிலி.
செளசெள காய்ய, காலையில 11 மணிக்கு சூப் மாதிரி செய்ஞ்சு குடிக்கலாம். இல்லன்னா மதிய உணவுக்கு கூட்டு, பொறியல் மாதிரி செய்ஞ்சு சாப்பிடலாம். குறிப்பா வயிற்றுப் பகுதியில இருக்கிற கெட்டக் கொழுப்பை குறைக்கக் கூடிய தன்மை இந்த காய்ல ரொம்ப அதிகமா இருக்கு.
Advertisment
Advertisements
மேலும் செள செள காய் ரத்த அழுத்தத்தை எப்போவும் கட்டுக்குள் வைக்கும். உங்களுக்கு ஹை பிபி இருந்தா இந்த காய்ய அன்றாட உணவுல சேர்த்துக்கோங்க. மாரடைப்பு, புற்றுநோய், நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பண்பு இந்த காய்க்கு உண்டு.
இந்த காய்ய 10நாளைக்கு ஒருமுறையாவது தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல்ல இருக்கக்கூடிய கழிவுகள் எல்லாம் வெளியேற்றம் செய்து கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி பல நன்மைகளை டாக்டர் மைதிலி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.