சௌ சௌ காய் உடலுக்கு பல சத்துகளை கொடுக்கிறது. இது நீர் காய் என்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் இந்த காய் வைத்து சுவையான சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சௌ சௌ காய் - 1
உளுந்து - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 6 பல்
புளி - சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் சௌ சௌ காயை தோல் நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும். அதிலுள்ள விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்ததாக சௌ சௌ சேர்த்து வதக்கி எடுக்கவும். இப்போது இந்த கலவையை ஆற விடவும். நன்கு ஆறியதும் அதோடு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அடுத்ததாக மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கலவையில் கொட்டினால் சுவையான, சத்தான சௌ சௌ சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட சுவையான இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“