ஒரு முறை இப்படி செளசெள கூட்டு செய்து பாருங்க. சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க.
தேவையான பொருட்கள்
சௌசௌ காய்- 2
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
4 பல் பூண்டு
மஞ்சள் தூள்
கடலை பருப்பு 50 கிராம்
பாசிப் பருப்பு 50 கிராம்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
2 பச்சை மிளகாய்
ஒரு துண்டு தேங்காய்
3 பூண்டு
கால் ஸ்பூன் சீரகம்
கொஞ்சம் மஞ்சள் தூள்
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம், கருவேப்பிலை
செய்முறை : செளசெளவை சிறிதாக வெட்டவும். ஒரு குக்கரில் செளசெள, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், பாசி பருப்பு, கடல பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும். தொடர்ந்து ஒரு மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளவும். 3 விசில் விட்டதும், அடுப்பை ஆன் செய்து, அதில் குக்கரை வைக்க வேண்டும். அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். இதில் உப்பு சரியாக இருக்கிறதா? என்று பார்த்துகொள்ளவும். தொடர்ந்து அதில் எண்ணெய், குடுகு, உளுந்து, சின்ன வெங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டவும். ஒரு சூப்பரான கல்யாண வீட்டு கூட்டு ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“