Christmas 2021 wishes : பண்டிகை காலங்கள் என்றால் சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான். பணி அழுத்தங்களை சற்றே ஓரங்கட்டிவிட்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது உண்மையாகவே நல்ல விசயம் தான்.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் சற்று தொய்வு அடைந்தது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸை வரவேற்க மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இயேசு பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் மாதம் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு பிறக்கின்றதால் இந்த ஒரு வார கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.
உங்களின் நண்பர்கள், உறவினர்கள், ப்ளம் கேக் தருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை பகிர வேண்டும். ஆனால் அது இதர வாழ்த்து அட்டைகள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த புகைப்படங்களை தரவிறக்கம் செய்து பகிர்ந்து மகிழுங்கள்.
மக்களிடையே அன்பும், நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் வளர்ந்தோங்கி வேறுபாடற்ற மக்களாக ஒருங்கிணைந்து வாழ வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் ஒவ்வொரு நாளும் நமக்கு எடுத்துக் கூற மறப்பதில்லை.
கொரோனாவின் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகின்ற இந்த சூழலில் உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் நீங்கள் இந்த திருநாளை கழிக்க விரும்பினால் தவறாது தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். பாதுகாப்பான கொண்டாட்டங்கள் நீண்ட ஆயுளுக்கான கொண்டாட்டமாக இருக்கும்.
நல்ல உணவு, நல்ல தூக்கம் மற்றும் நல்ல ஓய்வு என்று நீங்கள் இந்த நாளை இனிமையாக கழித்து மகிழ்வுடன் இருங்கள். மறுமுறையும் கூற வேண்டியது எங்கள் கடமை. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும். முக்கியமான பணி இல்லையென்றால் வெளியே செல்வதை தவிர்க்கவும். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லும் பட்சத்தில் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ளுங்கள். சானிடைஸைரை எப்போதும் உங்களின் பைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
தபாலில் வாழ்த்து அனுப்புகிற காலம் போயே போச்சு! வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் காலம் இது. அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதான். அதன் மூலமாக நம் நட்புக்களையும், உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள வாழ்த்துகளை பறிமாறுவோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.