puducherry | christmas | புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் உலர் பழங்கள்,வெளிநாட்டு மதுபானங்களை கொண்டு 40 கிலோ எடையில் தயாராகும் கிறிஸ்மஸ் கேக் கலவை செய்யும் பணியினை சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி புரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை யொட்டி கேக் செய்யும் திருவிழா நடைபெற்றது.
இதில் 40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்கள் சேர்க்கப்பட்டன.
ஊறவைக்கப்பட்ட இந்தக் கலவை 40 நாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன் கிறிஸ்மஸ் கேக்காக வாடிக்கையாளர்கள் முன் கொண்டுவரப்படும்.
இந்நிகழ்ச்சியில் ரிசார்ட் நிர்வாக இயக்குனர் ஜெய பிரகாஷ், செயல் இயக்குனர்கள் ராஜ் திலக், அனு இலக்கியா மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“