கிறிஸ்துமஸ் 2018 : ஆரோக்கியமான பரிசுப் பொருட்களை எப்படி தேர்வு செய்வது ?

Christmas Celebration 2018 : மாறாக நாம் விரும்பும் மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்க என்ன வாங்கித் தரலாம் என்ற யோசனை மூளைக்குள்

Christmas Celebration 2018 : செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ். வீட்டில் அனைவருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட திட்டமிட்டிருப்பீர்கள். ஆனாலும் என்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுத்தாலும் அலங்காரப் பொருட்களாகவே இருக்கிறது. மாறாக நாம் விரும்பும் மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்க என்ன வாங்கித் தரலாம் என்ற யோசனை மூளைக்குள் !

Christmas Celebration 2018 – Christmas Gifts

இந்த வருட கிறிஸ்துமஸிற்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சில அழகான அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியமான அன்பளிப்புகளை பரிசாக அளிக்க சில ஐடியாக்கள் இதோ.

மேலும் படிக்க : பாரம்பரிய முறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி ?

ஃபிட்னஸ் பேண்ட்ஸ்

உங்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக கணக்கிட்டு, உங்களை அலெர்ட் செய்யும் கருவிகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எவ்வளவு நேரம் தூங்குகின்றீர்கள், எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு கலோரிகளை தினமும் எரிக்கிறீர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் துல்லியமாக தரும் ஒரு டிவைஸ் இது.

ஏர் ப்யூரிஃபையர்

நாளுக்கு நாள் பெரு நகரங்களில் ஏற்படும் காற்ற மாசுபாடானது கூடிக் கொண்டே செல்கிறது. வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு ப்ராண்ட்களில் கிடைக்கும் ப்யூரிஃபையர்களை வீட்டில் வாங்கி வைக்கலாம்.

எலக்ட்ரிக் மற்றும் பேட்டரி பொருத்தப்பட்ட ப்யூரிஃபையர்கள் மிகவும் அதிக விலை கொண்டதாக இருந்தால் தாராளமாக கற்றாழை, மணி ப்ளாண்ட் போன்ற செடிகளைக் கூட நீங்கள் வாங்கி வைத்து வளர்க்கலாம்.

சமையல் புத்தகங்கள்

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சமையல் செய்வதில் அலாதி இன்பம் என்றால், நீங்கள் உங்கள் விருப்பம் போல் சமையல் புத்தகங்களை வாங்கித் தரலாம். ஆரோக்கியமான சமையல் செய்முறைகள் அடங்கிய புத்தகங்கள் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும் உற்ற துணையாக நிற்கும்.

யோகா மேட்

யோகா செய்ய விரும்பும், அல்லது உடல் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை கொள்ளும் ஒருவருக்கு நீங்கள் இந்த அன்பளிப்பை கிறிஸ்துமஸ் பரிசாக தராலாம். இப்போதெல்லாம் கஸ்டமைஸ்ட் மேட்கள் ஆன்லைனில் நிறைய கிடைப்பதால் நீங்கள், உங்களின் நண்பர்களுக்கு பிடித்த ஒன்றை வாங்கித் தரலாம்.

ஸ்போர்ட்ஸ் கியர்ஸ்

வீடியோ கேம், செல்போன்கள் போன்றவற்றை பரிசாக தருவதற்கு பதிலாக பேட்மிட்டன், டென்னிஸ், பேஸ்கட் பால், ஃபுட்பால் போன்ற ஸ்போர்ட்ஸ் கியர்களை வாங்கி பரிசாக தரலாம். மிகவும் குறைவான விலையில் இதனை வாங்க இயலும். பட்ஜெட்டிற்குள் அடங்கும் அழகான அன்பளிப்புகளில் இதுவும் அடங்கும்.

மேலும்  படிக்க : கிறிஸ்துமஸ் விழாவிற்காக பட்ஜெட் விலையில் வீட்டை அலங்கரிப்பது எப்படி ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close