Christmas Decoration Ideas : கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையும், வீட்டு அலங்காரத்தையும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கடைகளில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களை வைத்து மட்டும் அலங்கரிக்காமல் நாமும் சில பொருட்களைச் செய்து வீட்டை அலங்கரிக்கலாம். இந்தப் பொருட்களைச் செய்யும்போது வீட்டில் உள்ள அனைவரையும் இணைத்துக்கொண்டால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கிவிடும்.
விடுமுறை என்பதால் குழந்தைகளையும் வீட்டை அலங்கரிப்பதில் ஈடுபடுத்தலாம். கிறிஸ்துமஸ் விழாவுக்கு வீட்டை அலங்கரிப்பதற்கான சில வழிகள்:
வீட்டுக்குள் நுழையும்போது கிறிஸ்துமஸ் உணர்வு நம்மை ஆட்கொள்ள முதலில் நீங்க செய்ய வேண்டியது.வண்ண விளக்குகளுடன் கண்ணைப் பறிக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை முடிந்த வரையில் அழகாக அலங்கரிப்பது.
கிறிஸ்துமஸ் மரம்:
கிறிஸ்துமஸ் மரத்தை எப்போதுமே கடையில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீங்களே வீட்டிலும் எளிமையாக உருவாக்கலாம். அது பார்ப்பதற்கும் அழகாகவும் இருக்கும்.
கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளைக் கண்ணாடிக் குடுவையில் போட்டு வரிசையாக ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம். கொஞ்சம் பெரிய குடுவையில் கிளைகளை அதிகமாக வைத்தால் அதிலேயே அலங்காரப் பந்துகள், பனி மனிதன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை வைத்து அலங்கரிக்கவும் செய்யலாம்.
Christmas Tree Decoration Ideas
கண்ணாடிக் குடுவை அலங்காரம்
டைனிங் டேபிளை அலங்கரிக்க கண்ணாடிக் குடுவைகளைப் பயன்படுத்துவது எளிமையான வழி. கண்ணாடி டம்ளர்களில் ஆங்காங்கே சிறிய கோல்டன் அலங்கார மணிகள், பந்துகள், நட்சத்திரங்களைப் போட்டு வைக்கலாம். இது சாப்பாட்டு மேசைக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன் மேசையின் ஓரங்களில் சாட்டின் ரிப்பன் மணிகளையும் தொங்கவிடலாம்.
Christmas Tree Decoration Ideas
பூந்தொட்டிகளில் அலங்காரம்
வாசலில் இரண்டு சாதாரணப் பூந்தொட்டிகளில் அலங்காரப் பந்துகளை வைத்து செடி போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். இந்த இரண்டு தொட்டிகளையும் கதவுக்கு வெளியே வைத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பதற்கு ஏற்றதாக இருக்கும்.