டிசம்பர் மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஓட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.
இதில் கேக் தயாரிக்க சுமார் ஒரு டன் கேக் தயாரிப்பதற்கான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலக்கும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஓட்டல் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இது குறித்து ஓட்டலின் நிர்வாக இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும், இந்த ஆண்டு கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“