Christmas Tree Decoration Ideas: வீட்டிலேயே அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்வது எப்படி? செம ஐடியா இதோ
Beautiful Christmas Tree Decorating Ideas: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நீங்கள் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் மரத்தை அமைப்பதற்கான எளிமையான ஐடியாவை இங்கே தருகிறோம் பாருங்கள்.
Unique Christmas Tree Ideas for 2024: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தயாராகி விட்டீர்களா? இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வீட்டில் கிறிஸ்துமஸ் குடில், நட்சத்திர விளக்கு கட்டிவிட்டீர்களா? நிச்சயமாக நீங்கள் தயாராகி விட்டிருப்பீர்கள். ஏனென்றால், இது கொஞ்சம் எளிதுதான். ஆனால், இந்த கிறிஸ்துமஸ் மரத்தைதான் எப்படி அழகாக அலங்காரம் செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். இதோ உங்களுக்காக அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்ய ஐடியா தருகிறோம்.
Advertisment
முதலில் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் அமைப்பதற்கான ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். காகிதம், துடுப்பு குச்சிகள், பிளாஸ்டிக் தாள்கள் அல்லது வேறு பொருட்களை பயன்படுத்தி உங்கள் கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைக்கலாம். தயாரிக்கும் அளவு உங்கள் வீட்டில் கிடைக்கும் இடத்தை பொறுத்தது.
முதலில் பேட்டரியில் எரியக்கூடிய சிறிய அளவிலான எல்.இ.டி சீரியல் லைட்களை வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சுவரில் வெளிப்புறம் மூலையில் ஜிக்ஜாக்காக கிறிஸ்துமஸ் மரம் வடிவில் செலோஃபான் டேப் முலம் சீரியல் லைட்டை ஒட்டி விடுங்கள். பிறகு பச்சை நிற பளபளக்கும் ஜிகினா சரம் தாள்களை மாட்டிவிடுங்கள். இப்போது ஒரு ஸ்டாரை அதன் தலையில் வையுங்கள். பூக்கள், பெல், ஆகியவற்றால் அலங்கரியுங்கள். அவ்வளவுதான் சூப்பரான கிறிஸ்துமஸ் மரம் தயார். உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.
Advertisment
Advertisement
கிறிஸ்துமஸ் மரம் அமைக்க இன்னும் எளிமையான ஒரு வழியை சொல்கிறோம். பேட்டரியில் எரியக்கூடிய சிறிய அளவிலான எல்.இ.டி சீரியல் லைட்களை வாங்கிக்கொள்ளுங்கள். அதை உங்கள் வீட்டு சுவரில் கிறிஸ்துமஸ் மரம் வடிவில் செலோஃபான் டேப் முலம் ஜிக்ஜாக்காக சீரியல் லைட்டை ஒட்டி விடுங்கள். இப்போது பேட்டரியை ஆன் செய்யுங்கள். எளிமையான கிறிஸ்துமஸ் மரம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“