New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/christmas-wishes.jpg)
Christmas 2018 Wishes
Christmas Wishes, Quotes, Sayings in Tamil: கிறிஸ்துமஸ் விழாவுக்கு உங்களின் நட்புக்களுக்கும், தோழமைகளுக்கும் நீங்கள் வாழ்த்துகளை பறிமாறி மகிழ வேண்டாமா? அதற்குத்தான் இந்தக் கட்டுரை!
Christmas 2018 Wishes
Christmas 2018 Wishes : பண்டிகை காலங்கள் என்றால் சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான். பணி அழுத்தங்களை சற்றே ஓரங்கட்டிவிட்டு, மனதுக்கு இதமானவர்களுக்கு வாழ்த்துகளை பறிமாறி மகிழ்வதைவிட பெரிய இன்பம் எதுவாக இருந்துவிட முடியும். கிறிஸ்துமஸ் விழாவுக்கு உங்களின் நட்புக்களுக்கும், தோழமைகளுக்கும் நீங்கள் அப்படி வாழ்த்துகளை பறிமாறி மகிழ வேண்டாமா? அதற்குத்தான் இந்தக் கட்டுரை!
உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பானது கி.பி. 1ம் ஆண்டு நடக்கவில்லை. அதற்கு முன்பே, அனேகமாக கி.மு. 2 அல்லது கி.மு. 7ம் ஆண்டு இயேசு பிறந்திருக்கலாம் என்று கூறுவோர்களும் உண்டு.
இயேசு பிறந்த தினம் எது என்பதற்கான குறிப்புகள் பைபிளில் இல்லை. ஆனாலும், இயேசு அவதாரம் மற்றும் அப்போது இருந்த வானியல் குறிப்புகளின் அடிப்படையில் டிசம்பர் 25ம் தேதிதான் கிறிஸ்து பிறந்த நாள் என்று முதலாவது கிறிஸ்தவ ரோமானிய பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில்தான் (கி.பி. 336) இறுதிசெய்யப்பட்டது.
அதன் பிறகு, சில ஆண்டுகள் கழித்து, ‘கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25ம் தேதிதான்’ என்று போப் ஜூலியஸ்1 அதிகாரபூர்வமாக அறிவித்தார். அப்போதிருந்து, உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் டிசம்பர் 25ம் தேதிதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஜனவரி 6, 7ம் தேதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றவுடன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு (சான்டா கிளாஸ்) அடுத்தபடியாக நினைவுக்கு வருவது பைன் அல்லது பிர் ஊசி இலை மரங்கள்தான். இயேசுவின் இந்த அவதார நாளில் தேவனின் மகிமைகளைப் பாடி அவரது பாதுகாப்பில் எப்போதும் இருப்போம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இதை மறக்கலாமா?
இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.. இதோ உங்களுக்கான வாழ்த்து செய்தி.. நண்பர்கள்,உறவினர்கள் உடன் பகிருங்கள்.
தபாலில் வாழ்த்து அனுப்புகிற காலம் போயே போச்சு! வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் காலம் இது. அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதான். அதன் மூலமாக நம் நட்புக்களையும், உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள வாழ்த்துகளை பறிமாறுவோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.