திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு பேசிய யோகா ஆசிரியர் விஜயகுமார், இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்று சாம்பாருக்காக பருப்பு கடைவதற்கு பயன்படுகிறது என்றும் இண்டாவது தயிர் கடைஞ்சு அதிலிருந்து வெண்ணெயை பிரித்தெடுக்க பயன்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் தயிரை கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படும் மத்துவகைகளில் இரண்டு உள்ளது. சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள் அல்லது வீட்டிலுள்ள மரத்தூண்களில், ஒரு கயிறு கட்டி இருக்கும் இந்த வகை தயிர் கடைய பயன்படுகிறது.
இந்த வகையான மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும், நின்றுகொண்டே கடைவதற்கு ஏற்றவாறு 5, 6 அடி நீளமுள்ளதாக இருக்கும். அதிக அளவு தயிரினை கடைவதற்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
மற்றொன்று உட்கார்ந்து கொண்டு தயிர் கடைவதற்கும் இது குறைவான அளவு தயிரை கடைவதற்கு பயன்படுகிறது என்றும் அவர் விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“