chutney recipe idli dhosai chutney chutney recipes : இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள். காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம். பேச்சுலர்களுக்கு ஏற்ற சட்னியும் கூட.
Advertisment
தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு, மிக எளிதாகவும், சுவையாகவும் சமைத்திடலாம்.
ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் சட்னி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Advertisment
Advertisements
சற்று வித்தியாசமாக வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னியானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட. மேலும் மதிய வேளையில் இட்லி எடுத்து சென்றால், அதற்கு அருமையாகவும் இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”