Advertisment

ஹெல்த்தி, டேஸ்ட்டி… செலவே இல்லாமல் சில நிமிடங்களில் சூப்பரான சட்னி!

karuveppilai chutney or curry leaves chutney recipe in tamil: மூளை சிறந்த முறையில் செயல்பட வேண்டுமெனில் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

author-image
WebDesk
Feb 22, 2022 07:32 IST
Chutney recipes in tamil: how make Curry leaves chutney and its super benefits

 karuveppilai chutney recipe in tamil: நமது அன்றாட உணவில் கூடுதல் சுவையைக் கொடுக்க வல்லதாக கறிவேப்பிலை உள்ளது. இவற்றின் மணமணக்கும் நறுமணம் உணவுகளை ருசி பார்க்க நம்மை சுண்டி இழுக்கிறது. மேலும், இவற்றை எந்தவொரு உணவில் வேண்டுமானாலும் சேர்த்து ருசிக்கலாம்.

Advertisment

இந்த அற்புத கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இவை மிக அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

கறிவேப்பிலையின் அற்புத பயன்கள்

publive-image

கறிவேப்பிலை

கறிவேப்பிலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மூளை சிறந்த முறையில் செயல்பட வேண்டுமெனில் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது.

குடல் இயக்கத்திற்கு உதவ, காலையில் வெறும் வயிற்றில் சில பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் குமட்டல் ஏற்படும் போது கறிவேப்பிலையை சாப்பிடலாம்.

கறிவேப்பிலை வயிற்றில் முக்கிய செரிமான நொதிகளை வெளியிட உதவுகிறது, இதன் மூலம் காலை சுகவீனத்தை நீக்குகிறது.

இப்படி ஏராளமான பயன்களை உள்ளடக்கியுள்ள கறிவேப்பிலையில் எப்படி டேஸ்டியான சட்னி தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

curry leaves benefits in tamil: Health Benefits of Curry Leaves tamil

கறிவேப்பிலை

கறிவேப்பிலை சட்னி எப்படி தயார் செய்வது?

கறிவேப்பிலை சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்

சீரகம் - சிறிதளவு

உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5

வேர்க்கடலை - சிறிதளவு (வறுத்தது)

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

தேங்காய் - 3 கீறல்

கறிவேப்பிலை - 2 கொத்து (தண்ணீரில் நன்கு அலசியது)

புளி - சிறிதளவு

தாளிக்க

கடுகு

உளுந்தம் பருப்பு

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை சட்னி சிம்பிள் டிப்ஸ்

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

இவை பொன்னிறமாக வரும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பெருங்காயம் மற்றும் தேங்காய் புளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அலசி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்க்கவும்.

கறிவேப்பிலை ஓரளவு வதங்கிய பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

இவற்றை அப்படி சில நிமிடங்களுக்கு நன்றாக ஆற வைத்துக்கொள்ளவும்.

அவை நன்றாக ஆறிய பின்னர் அவற்றை மிக்சியில் இட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

இவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அவற்றுடன் தாளிப்பை சேர்த்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.

இந்த டேஸ்டி சட்னியை இட்லி, தோசை, தயிர் சாதம், சூடான சாதத்துடன் சேர்த்து ருசிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chutney #Tamil Food Recipe #Healthy Food Tips #Chutney Recipe #Benefits Of Curry Leaves #Lifestyle #Food Recipes #Healthy Life #Food Tips #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment