Chutney recipes, making chutney : தக்காளி,வெங்காயம்,தேங்காய் இல்லாமல் புதுசா சுவையான இந்த சட்னி
Advertisment
இந்த lockdown நேரத்தில் தக்காளி,வெங்காயம்,தேங்காய் இல்லாமல் 10 இட்லி சாப்பிட தூண்டும் சட்னி இது. மிஸ் பண்ணாம பாருங்க. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் இது.
இந்தியர்களுக்கு சட்னி மிகவும் விருப்பமான ஓர் உணவுப் பொருள். குறிப்பாக இட்லி, தோசை போன்றவற்றை வீட்டில் செய்யும் போது, அதற்கு சட்னி இல்லாமல் உள்ள இறங்காது. இட்லி, தோசை போன்றவற்றிற்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.
Advertisment
Advertisements
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
பூண்டு – 1 கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு (அ) கடலை பருப்பு – 1/4 அளவு
வேர்க்கடலை – 1 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி கரைத்த நீர் – 1/2 கப்
வரமிளகாய் – 4 அல்லது 5
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
பெருங்காய தூள் – சிறிதளவு
முதலில் ஒரு கடாயை ஹீட் செய்துக்கொள்ள வேண்டும். கடாய் நன்றாக ஹீட் ஆன பிறகு 2 ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். அடுத்து ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை சேர்த்து கொள்ளவேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் பூண்டு சேர்க்காமல் கூட செய்யலாம்.