இப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க… பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம்.

chutney recipes onion chutney recipe onion chutney
chutney recipes onion chutney recipe onion chutney

chutney recipes onion chutney recipe onion chutney : தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு… மிக எளிதாகவும், சுவையாகவும் சமைத்திடலாம் வெங்காய சட்னி.

காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம்.

சின்ன வெங்காயம் – ஒரு பௌல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 புளி – ஒரு துண்டு கறிவேப்பிலை.

ஒரு வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் 4 காய்ந்த மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், புளி துண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், இதனை ஆறவைத்து, மிக்சி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்ளோதாங்க.. சுவையான வெங்காய சட்னி ரெடி..!.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chutney recipes onion chutney recipe onion chutney in tamil onion chutney recipe video tamil

Next Story
உடல் பருமனை குறைக்கும் வாழைத்தண்டு பொரியல்!Vazhaithandu Poriyal, Vazhaithandu recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com