Chutney recipes, Verkadalai Chutney : எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் வேர்க்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.மேலும் குழந்தைகள் இச்சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisment
காய்ந்த வேர்க்கடலை – 250 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
Advertisment
Advertisements
பூண்டு – 5 பல்
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
உழுந்தம் – பருப்பு
சீரகம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.
ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும், கெட்டியான வேர்கடலை சட்னி தயார். இவை இட்லி, தோசை, சாதம், பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.