cinema news in tamil : மரணம் என்பது யாராலும் முடிவு செய்ய முடியாத ஒன்று என்பது மனிதராக பிறந்த அனைவருக்கும் தெரியும். இருந்த போதும் அதை ஏற்றுக் கொள்ள தான் மனம் வலிக்கும்.இரவு வரை நம்முடன் இருந்தவர்கள் திடீரென்று காலை விடிந்ததும் இல்லை, இனி அவர்களை ஒருபோதும் பார்க்கவே முடியாது என நினைக்கும் போது தான் நம்மை அறியாமல் துக்கம் நெஞ்சை முட்டும்.
இந்த துக்கத்திற்கு சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. ரசிகர்கள் உட்பட சக கலைஞர்களையும் அதிர்ச்சிக் கொள்ளாக்கிய பிரபலங்களின் மரணங்கள் குறித்து தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
1. நா. முத்துக்குமார் :
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-16-1024x520.jpg)
இப்போது வரை இவரின் இழப்பை நினைத்து திரையுலகம் கண்ணீர் சிந்துக் கொண்டு தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து விட்டு நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக 41 வயதில் காலமானார். இவரின் பிரிவு இன்று வரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
2. ஜே.கே ரித்தீஷ்:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-17-1024x683.jpg)
46 வயதில் ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் ரித்தீஷூக்கு மிகப் பெரிய அளவில் மரியாதை. அரசியல் பிரச்சாரத்தில் இருக்கும் போதே தீடீரென்று மயங்கி விழுந்தவர் அங்கேயே இறந்தார். நடிகர் சங்கத்திற்கு ஏகப்பட்ட நல உதவிகளை செய்துள்ளார்.
3. ஸ்ரீதேவி:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-10-1024x577.jpg)
மீண்டும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு நடிப்பு மயில் கிடைக்குமா? என்றால் அது சாத்தியமில்லை. 57 ஆவது வயதில் மாரடைப்பில் மரணத்தை சந்தித்தார் ஸ்ரீதேவி. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. யாருமே எதிர்பார்க்காத ஒன்று.
4. செளந்தர்யா :
நடிகை செளந்தர்யா விமான விபத்தில் மரணமடைந்தார். சினிமா ஹூட்டிங்கிற்காக விமானத்தில் சென்றவர்கள் கடைசி வரை வீடு திரும்பவில்லை. புகழின் உச்சில் இருக்கும் போதே அவரின் மரணம் நிகழ்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-18.jpg)
5. மணிவண்ணன்:
இவரை போன்ற ஒரு நடிகர், வில்லன், நகைச்சுவை நடிகர், இயக்குனர், கவிஞர், போராளி, எழுத்தாளர், வசனக்கர்த்தா இனி வரபோவதில்லை. மணிவண்ணனின் இழப்பு சினிமாவிற்கு கிடைத்த பேரிழப்பு. 59 வயதில் மணிவண்ணன் அனைவரையும் விட்டு பிரிந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-19-1024x518.jpg)
6. முரளி:
/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-15.jpg)
தனது 46 ஆவது வயதில் ரசிகர்கள், குடும்பத்தினரை விட்டு விண்ணுலகம் சென்றார் முரளி. இரவு தூங்க சென்றவர் காலை எழவில்லை. சோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்ததை உறுதி செய்தனர்.